ஸ்டெர்லைட் ஆலையை மூடுவது என்கிற பேச்சுக்கே இடமில்லை: வேதாந்தா குழுமம்

0
193

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை மூடுவது என்ற பேச்சுக்கே இடமில்லை என்று வேதாந்தா குழுமத்தின் வர்த்தக மேம்பாட்டுத்துறை இயக்குநர் கிஷோர் குமார் தெரிவித்துள்ளார்.

ஸ்டெர்லைட் ஆலை முழுமையாகச் சட்டத்துக்கு உட்பட்டுச் செயல்பட்டு வருகிறது . ஸ்டெர்லைட் ஆலையில் இருந்து சேகரிக்கப்பட்ட புள்ளிவிவரங்களை நாங்கள் தீவிரமாக கண்காணித்து, மாசு எந்த அளவில் இருக்கிறது என்பதையும் தொடர்ந்து கண்காணித்து வருகிறோம். மற்றும் இந்த வழக்கின் மற்ற அம்சங்களையும் கண்காணித்து வருகிறோம்.

நீண்டகாலத்துக்கு முன்பாகவே ஸ்டெர்லைட் ஆலை செயல்படுவதற்கு பசுமை தீர்ப்பாயம்எங்களுக்கு அனுமதி தந்துள்ளது . நிறுவனத்தின் உரிமத்தை புதுப்பிக்கும் காலக்கெடு முடிவதற்கு மிக முன்பாகவே, நாங்கள் தமிழக அரசிடம் விண்ணப்பித்துவிட்டோம்.

ஆனால், உரிமம் புதுப்பிக்கும் காலக்கெடு முடிந்தபின் அரசு அதிகாரிகள் பல்வேறு ஆவணங்கள் தேவை என கேட்டுக்கொண்டு இருக்கிறார்கள். எங்களைப் பொறுத்தவரை ஸ்டெர்லைட் ஆலையை மூடுவது என்ற பேச்சுக்கே இடமில்லை. தற்போது ஸ்டெர்லைட் ஆலையை மூடிவைத்து, உற்பத்தியை நிறுத்திவைத்து இருப்பதால், ஒரு நாளைக்கு 1200 டன் தாமிரம் உற்பத்தி பாதிக்கப்பட்டிருக்கிறது.

இது உற்பத்திக்கும் , தேவைக்கும், இடையே மிகப்பெரிய இடைவெளியை ஏற்படும். இந்த இடைவெளியைச் சமாளிக்க, மத்திய அரசு வேறுவழியின்றி, வெளிநாடுகளில் இருந்து தாமிரத்தை இறக்குமதி செய்ய வேண்டியது இருக்கும். இதனால், அன்னியச்செலாவணியை அதிகமாகச் செலவு செய்ய வேண்டியது இருக்கும்.

நாட்டின் தாமிரத்தின் தேவையை நிறைவு செய்வதில் ஸ்டெர்லைட் ஆலை 3-வது இடத்தில் இருந்து வருகிறது.
பல்வேறு சர்வதேச தரநிறுவனங்கள் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி அடுத்த 2 ஆண்டுகளில் 7 சதவீதம் அளவுக்கு உயரும் தெரிவித்துள்ளன .ஸ்டெர்லைட் ஆலையை விரிவாக்கும் திட்டம் குறித்தும் மீண்டும் ஒரு முறை ஆய்வு செய்யப்படும் என்றும் அவர் தெரிவித்தார் .

பராமரிப்புக்காக மூடப்பட்டுள்ள தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட வலியுறுத்தி பொதுமக்கள் இரண்டு மாதங்களுக்கும்
மேலாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். மக்கள் கொந்தளிப்பை பார்த்து இந்த ஆலையின் உரிமத்தை மாசு கட்டுப்பாட்டு வாரியம் புதுப்பித்து வழங்காததால் செயல்பாடு தற்காலிமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

நன்றி : the hindu

இதையும் படியுங்கள் : #SaveJournalism: “பெண்களின் மீதான அவமதிப்புச் சொல்லடிக்கு அடையாள எதிர்ப்புதான் இந்தக் கல்லடி”

இதையும் படியுங்கள் : உலகிலேயே மிகப் பெரிய கப்பல் Symphony of the Seas

கருத்துகள் இல்லை

ஒரு பதிலை விடவும்