தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக மக்கள் நடத்திய போராட்டத்தின்போது மக்கள் மீது போலீஸார் துப்பாக்கிச்சூடு நடத்தினர். இதில், 13 பேர் உயிரிழந்தனர். இதனை அடுத்து, ஆலையை மூட தமிழக அரசு அரசாணை பிறப்பித்தது. ஆலையும் சீல் வைத்து மூடப்பட்டது. ஆலைக்கு வழங்கப்படும் மின்சாரம், தண்ணீர் உள்ளிட்டவற்றின் இணைப்பும் துண்டிக்கப்பட்டது

இந்நிலையில், தமிழக அரசின் இந்த அரசாணைக்கு எதிராக டெல்லி பசுமை தீர்ப்பாயத்தில் வேதாந்தா நிறுவனம் இன்று மேல்முறையீடு செய்துள்ளது. இந்த மனு விரைவில் விசாரணைக்கு வர உள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here