“ஸ்டெர்லைட் ஆலையை செயல்பட அனுமதித்தால் மீண்டும் போராட்டம்”

0
3312

பராமரிப்புக்காக மூடப்பட்டுள்ள ஸ்டெர்லைட் ஆலையை செயல்பட அனுமதித்தால் அடுத்த 24 மணி நேரத்தில் போராட்ட அறிவிப்பை வெளியிடுவோம் என்றார் மதிமுக பொதுச் செயலர் வைகோ.தூத்துக்குடியில் சனிக்கிழமை இரவு நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் அவர் பேசியது: ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக பல்வேறு போராட்டங்களைநடத்தியுள்ளேன். சட்டரீதியாகவும் போராட்டம் நடத்தினேன். அப்போதுபோல்
இல்லாமல் தற்போது ஆலைக்கு எதிராக கிராம மக்கள், மாணவர்கள், வியாபாரிகள் போராடி வருவது மகிழ்ச்சி அளிக்கிறது. தற்போது, தூத்துக்குடி முழுவதும் போராட்டம் நடைபெறுவதால் ஸ்டெர்லைட் ஆலையில் பராமரிப்புப் பணி என மூடப்பட்டுள்ளது.

மக்கள் கொந்தளிப்பை பார்த்து மாசுக் கட்டுப்பாட்டுவாரியம் அனுமதியை ரத்து செய்துள்ளது. தற்போது நான் உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் வழக்குத் தொடர்ந்துள்ளேன்.இதில் ஸ்டெர்லைட் ஆலையை விரிவாக்கம் செய்யக் கூடாது என்பது மட்டுமன்றி, அந்த ஆலையை நிரந்தரமாக மூட வேண்டும் என குறிப்பிட்டுள்ளேன். தற்போது செயல்படாமல் உள்ள ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் செயல்பட அனுமதித்தால் அடுத்த 24 மணி நேரத்தில் போராட்டத்தை அறிவிப்போம் என்றார் அவர்.

இதையும் படியுங்கள்: கோடை காலம்: கவனிக்க மற்றும் தவிர்க்க வேண்டியவைகள் எவை?; உணவு தரம் குறித்து எந்த எண்ணில் புகார் அளிக்கலாம்?; முழு விவரம்

இதையும் படியுங்கள்: பத்திரிகையாளர்கள் கவர்னரிடம் கேள்வி கேட்பது தவறா?

இதையும் படியுங்கள்: #BanSterlite: “மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்தை மூடிட்டுப் போக வேண்டியதுதானே”

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here