தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலையை மூட வலியுறுத்தி அம்மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு மாணவர்கள் போராட்டம் நடத்தினர்.

தூத்துக்குடி சிப்காட் வளாகத்தில் செயல்பட்டு வரும் ஸ்டெர்லைட் ஆலையால் சுற்றுச்சூழல் மற்றும் நிலத்தடி நீர் பாதிக்கப்படுவதால் அந்த ஆலையை நிரந்தரமாக மூட வலியுறுத்தியும், ஆலை விரிவாக்கப் பணிகளுக்கு எதிர்ப்பு தெரிவித்தும் குமரெட்டியார்புரம் கிராம மக்கள், தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனர். அவர்களுக்கு ஆதரவாக பல்வேறு தரப்பினரும் போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்நிலையில் இன்று (ஏப்.13), ஸ்டெர்லைட் ஆலை மூட வலியுறுத்தி, இந்திய மாணவர் சங்கத்தினர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

இதையும் படியுங்கள்: #NoIPLinChennai: சோறா, ஸ்கோரா? தெறிக்கவிட்ட தமிழ் மக்கள்

கருத்துகள் இல்லை

ஒரு பதிலை விடவும்