ஸ்டாலின் வீசும் பந்து நோ-பால் ஆகிவிடும் என்று மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

தமிழக பட்ஜெட் மீதான விவாதம் சட்டப்ரேவையில் நடைபெற்று வருகிறது. அப்போது பேசிய திமுக எம்எல்ஏ பொன்முடி, ஸ்டாலின் வீசும் பந்தில் அதிமுக ஆட்சி கிளீன் போல்டு ஆகும் என்றார்.

இதற்கு பதிலளித்த அமைச்சர் ஜெயக்குமார் ஸ்டாலின் வீசும் பந்து நோ-பால் ஆகும் என்று தெரிவித்தார். 
mk stalin.001

தொடர்ந்து பேசிய அமைச்சர் தங்கமணி, மைதானத்திற்குள் வந்து வீசப்படும் பந்துதான் கணக்கில் எடுத்துக்கொள்ளப்படும். மைதானத்திற்கு உள்ளேயே வராமல் ஸ்டாலின் பந்தை வீசிக்கொண்டிருக்கிறார் என்று பதிலளித்தார். 

பல்வேறு திட்டங்கள் மூலம் முதல்வர் எடப்பாடி பழனிசாமி சிக்ஸர் அடித்துக்கொண்டிருக்கிறார் என நேற்று செம்மலை தெரிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது. 

கருத்துகள் இல்லை

ஒரு பதிலை விடவும்