சட்டசபையில் ஸ்டாலினை எதிர்க்கட்சி தலைவர் என்று மரியாதை கொடுக்காமல் அவைக்காவலர்களால் தாக்கப்பட்டிருப்பது கடும் கண்டனத்திற்குரியது என கொங்குநாடு மக்கள் தேசியக் கட்சியின் தலைவர் ஈஸ்வரன் தெரிவித்துள்ளார்.

eswaran

இது குறித்து அவர், சட்டப்பேரவையில் நடைபெற்ற அராஜகங்களுக்கு அனைத்திற்கும் சபாநாயகரின் செயல்பாடுகள்தான் காரணம் என்றும், மக்கள் விரும்பாத ஒரு ஆட்சியை வலுக்கட்டாயமாக சபாநாயகர் திணித்திருப்பதாகவும் குற்றம் சாட்டியுள்ளார். எதிர்க்கட்சிகளை வலுக்கட்டாயமாக வெளியேற்றிவிட்டு நம்பிக்கை வாக்கெடுப்பு எடுத்திருப்பது எந்தவிதத்தில் நியாயம் எனவும் கேள்வி எழுப்பியுள்ளார். எதிர்க்கட்சி தலைவரையும், சட்டமன்ற உறுப்பினர்களையும் உடனடியாக விடுதலை செய்ய வேண்டும். விடுதலை செய்யவில்லை என்றால் தமிழகம் முழுவதும் போராட்டம் நடக்கும் எனவும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.


இதையும் படியுங்கள் : ஸ்டாலினுக்கு வந்த சோதனை

கருத்துகள் இல்லை

ஒரு பதிலை விடவும்