திமுக செயல்தலைவர் ஸ்டாலின் முதல்வர் பதவிக்கு பகல் கனவு காண்பதாக துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் விமர்சித்துள்ளார்.

நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டை அருகே ஞாயிற்றுக்கிழமை (நேற்று) நடைபெற்ற எம்.ஜி.ஆர்.நூற்றாண்டு விழாவில் கலந்துகொண்டு பேசிய துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம், அதிமுக ஆட்சி தொடரக் கூடாது என்று பலரும் திட்டம் போடுவதாகவும், அவர்களின் சதித் திட்டத்தை, தவிடு பொடியாக்கும் ஆற்றல் தங்களிடம் இருப்பதாகவும் கூறினார். மேலும் அவர், எம்ஜிஆர் உயிருடன் இருக்கும் வரையில், ஆட்சியைப் பற்றி, கனவுகூட காண முடியாமல் இருந்த திமுகவினர், அவரின் மறைவுக்குப் பின்னர், இனி தமிழகம் தங்களுக்கே என்று தப்புக் கணக்கு போட்டதை ஜெயலலிதா தவிடு பொடியாக்கியது போன்றே இப்போதும் திமுகவினரின் கனவு தவிடு பொடியாக்கப்பட்டதாகத் தெரிவித்தார்.

இதையும் படியுங்கள்: துல்லியம், நியாயம், ஆதாரம்: ஊடகவியலின் அடிப்படைகள்

கருத்துகள் இல்லை

ஒரு பதிலை விடவும்