இயக்குனர் பிரியதர்ஷனின் மகளும் நடிகையுமான கல்யாணி பிரியதர்ஷன் தமிழில் சிவகார்த்திகேயன் நடித்த ஹீரோ திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகப்படுத்தப்பட்டார்.
தற்போது மலையாளம், தெலுங்கு, தமிழ் என பல மொழிகளில் நடித்து வருகிறார்.
அதைத் தொடர்ந்து சிம்பு நடித்து வரும் மாநாடு மற்றும் துல்கர்சல்மானுடன் இணைந்து வான் உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்து வரும் கல்யாணி தற்போது மலையாளத்தில் மோகன்லால் மகன் பிரணவ் ஜோடியாக ஹிருதயம் என்கிற படத்தில் நடித்து வருகிறார்.
சமீபத்தில் துபாய் சென்ற கல்யாணி, அங்கே தான் ஸ்கைடைவிங் செய்யும் புகைப்படம் ஒன்றை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இந்த ஸ்கை டைவிங் அனுபவம் குறித்து கூறும்போது,“வெளியே சிரிக்கிறேன் உள்ள அழுகிறேன்” என்கிற கேப்ஷனுடன் குறிப்பிட்டுள்ளார்.

