ஷாரூக்கானை சந்தித்தது ஏன்? வெற்றிமாறனின் பதில் இதுதான்

0
224

பிரபல  நடிகர் ஷாரூக்கான் கடைசியாக ஜீரோ என்ற படத்தில் நடித்திருந்தார். இந்தப் படத்துக்குப் பிறகு அவர் நடிக்கும் அடுத்த படத்தை இயக்கப்போவது யார் என்ற எதிர்பார்ப்பு நிலவி வருகிறது.

இந்நிலையில் இயக்குநர் அட்லீ – ஷாரூக்கானை வைத்து சங்கி என்ற படத்தை இயக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகின. அதற்கான அறிவிப்பு ஷாரூக்கானின் 54-வது பிறந்ததினமான நவம்பர் 2-ஆம் தேதி வெளியாகும் என்றும் கூறப்பட்டது. ஆனால் அப்படியான அறிவிப்புகள் எதுவும் வெளியாகவில்லை.

இதனிடையே ஷாரூக்கானின் பிறந்தநாள் நிகழ்ச்சியில் இயக்குநர் அட்லீ மற்றும் வெற்றிமாறன் ஆகியோர் கலந்து கொண்டனர். அதற்கான புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகின.

இதையடுத்து இயக்குநர் வெற்றிமாறன் இயக்கத்தில் அசுரன் படத்தின் இந்தி ரீமேக்கில் நடிகர் ஷாரூக்கான் நடிக்க இருப்பதாக பேசப்பட்டது. இந்நிலையில் ஷாரூக்கானுடனான சந்திப்பு குறித்து இயக்குநர் வெற்றிமாறன் பதிலளித்துள்ளார்.

இதுகுறித்து ஊடகம் ஒன்றுக்கு பேட்டியளித்திருக்கும் இயக்குநர் வெற்றிமாறன், அசுரன் படம் ஷாரூக்கானுக்கு மிகவும் பிடித்திருந்ததால் என்னை நேரில் சந்திக்க விரும்பினார். அதற்காகத்தான் அவரைச் சந்தித்தேன். வேறு காரணம் எதுவும் இல்லை” என்று கூறியுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here