லவ் ஜிகாத் என்ற பெயரில் முஸ்லிம் இளஞரைக் கொன்ற ஷாம்புலால் என்பவரின் காட்சிப் படத்தைக் கொண்டு ராமநவமியை இந்துத்துவா அமைப்பினர் கொண்டாடியது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கடந்தாண்டு, ராஜஸ்தான் மாநிலம் ராஜ்சமந்த் மாவட்டத்தில், இளைஞர் ஒருவரை, இந்துத்துவா அடிப்படைவாதி ஒருவர் கொடூர ஆயுதத்தால் தாக்குவது போன்றும், படுகாயமடைந்த அவர் மீது தீவைப்பது போன்ற காட்சியும் சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவியது.

இதனைத்தொடர்ந்து போலீசார் நடத்திய விசாரணையில் படுகொலை செய்யப்பட்டவர் மேற்கு வங்க மாநிலம் மால்டா பகுதியைச் சேர்ந்த கூலித் தொழிலாளி முஹம்மது அஃப்ரசூல் என்றும் தெரிய வந்தது. மேலும் அந்த நபரை அடித்துக் கொல்பவர் ராஜ்சமந்த்தைச் சேர்ந்த, ஷாம்புலால் எனவும் தெரிய வந்தது. இதனையடுத்து அந்த நபரை போலீசார் கைது செய்து சிறையிலடைத்தனர்.

sambu

இந்தியா முழுவதும், கடந்த ஞாயிற்றுக்கிழமையன்று ராமநவமி கொண்டாடப்பட்டது. அப்போது ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூரில், லவ் ஜிஹாத் என்ற பெயரில் முஸ்லிம் இளைஞரக் கொன்ற ஷாம்புலாலின் காட்சிப் படத்தைக் கொண்டு, சிவசேனா கட்சியைச் சேர்ந்தவர்கள் கொண்டாடியுள்ளனர். மேலும், ”இந்து சகோதரர்களே விழித்தெழுங்கள். உங்கள் தங்கை மற்றும் மகள்களைக் காப்பாற்றுங்கள்” என்ற வாசகத்தையும் எழுதி வைத்திருந்தனர்.

இதையும் படியுங்கள்: உலக தண்ணீர் தினம் : 84.4 கோடி மக்கள் தண்ணீர் இல்லாமல் அவதி

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here