ஷாந்தனுவின் ‘இராவண கோட்டம்’ டைட்டில் போஸ்டர்; வெளியிட்ட லோகேஷ்

0
240

மணி ரத்னத்தின் ‘வானம் கொட்டட்டும்’, விஜய்யின் ‘மாஸ்டர்’ மற்றும் ‘முருங்கைக்காய் சிப்ஸ்’ ஆகிவற்றுடன் மேலும் சில நம்பிக்கையூட்டும் படங்களுடன் ஷாந்தனுவுக்கு 2020ஆம் ஆண்டு அமர்க்களமாகத் தொடங்கியது. இந்தப் படங்களைத் தவிர, தற்போது நடித்து வரும் ‘இராவண கோட்டம்’ திரைப்படம் தனது திரை வாழ்வில் திருப்புமுனையாக அமையும் என்று ஷாந்தனு திடமாக நம்புகிறார். 

இந்த படம் குறித்து விவரித்த தயாரிப்பாளர் கண்ணன் ரவி, “பொறுமையும் விடாமுயற்சியும் எத்தகைய தடைகளையும் தகர்த்தெறிந்து இடையூறுகளை இல்லாமல் செய்யும் அதிசயத்தை நிகழ்த்தும்” என்ற ஊக்கமளிக்கும் உன்னதமான பொன்மொழி எப்போதுமே எனக்கு மிகவும் பிடிக்கும். இதன் தாக்கம் எனது தயாரிப்பிலும் சிறப்பாக வெளிப்படுகிறது. கடந்த ஆண்டே ‘இராவண கோட்டம்’ படத்தை ஆரம்பித்து விட்டோம். செயல் வடிவம் கொடுத்து படத்தை உருவாக்க எங்கள் குழுவில் உள்ள ஒவ்வொருவரும் தங்கள் அதிக பட்ச உழைப்பைக் கொடுத்து பணியாற்றுகின்றனர். இந்த படத்தின் படப்பிடிப்பு தற்போது செயல்பாட்டில் உள்ள ஊரடங்கு முடிந்தவுடன் தொடங்கும் என்றும் அவர் அறிவித்தார்.

இதனை பிரபல இயக்குநர் லோகேஷ் கனகராஜ் ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டு, தனது நண்பன் ஷாந்தனுவை வாழ்த்தியுள்ளார். மேலும், இப்படத்தின் இயக்குநர் விக்ரம் சுகுமாரன், தயாரிப்பாளர் கண்ணன் ரவி, இசையமைப்பாளர் ஜஸ்டின் பிரபாகரன், நடிகை ‘கயல்’ ஆனந்தி, படத் தொகுப்பாளர் கிஷோர் மற்றும் அனைத்து படக்குழுவினருக்கும் தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here