வோடாபோன் நிறுவனம் புதிய ரீசார்ஜ் பேக்-ஐ அறிமுகம் செய்துள்ளது. இதன் மூலம் தேர்ந்தெடுக்கப்பட்ட சப்ஸ்கிரைபர்ஸுக்கு ஓராண்டு வரை வேலிடிட்டி கிடைக்கும். 999 ரூபாய்க்கு இந்த புதிய பேக் மூலம் ரீசார்ஜ் செய்தால், தினமும் 100 குறுஞ்செய்திகள் அனுப்பிக் கொள்ளலாம். 365 நாட்களுக்கு வேலிடிட்டி பெறலாம். ஆனால், இந்த மொத்த வேலிடிட்டி காலத்துக்கும் 12 ஜிபி டேட்டாதான் கிடைக்கும். ஓராண்டு வேலிடிட்டி காலத்துக்கு இது மிகவும் குறைந்த டேட்டாவாகும். ஏர்டெல் நிறுவனம் 998 ரூபாய்க்கு இதைப் போன்ற ஒரு பேக்-ஐ அறிமுகம் செய்ததை அடுத்து, வோடாபோன் நிறுவனமும் புதிய பேக்-ஐ அறிமுகப்படுத்தியுள்ளது. 

தற்போதைக்கு இந்த புதிய ரீசார்ஜை வோடாபோன் நிறுவனம், பஞ்சாப் வட்டத்துக்கு மட்டும் அறிமுகம் செய்துள்ளது. சீக்கிரமே மற்ற வட்டங்களுக்கும் இந்த சேவை கிடைக்கும். 
 

முன்னதாக ஏர்டெல் நிறுவனம் 998 ரூபாய்க்கு ஒரு ரீசார்ஜ் பேக்-ஐ அறிமுகப்படுத்தியது. அந்த பேக்கின் மூலம் ஒரு நாளைக்கு 100 குறுஞ்செய்திகள் அனுப்ப முடியும், 12 ஜிபி டேட்டாவைப் பெற முடியும். மேலும் ஏர்டெல் டிவி-க்கு இலவசமாக சப்ஸ்கிரைப் செய்து கொள்ள முடியும். அந்த பேக்கின் வேலிடிட்டி 336 நாட்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த பேக்கிற்கு போட்டியாகத்தான் வோடாபோன், 999 ரூபாய் பேக்-ஐ அறிமுகப்படுத்தியுள்ளது. 

12 ஜிபி டேட்டா போதாது என்று நினைக்கும் வோடாபோன் வாடிக்கையாளர்கள், 1699 ரூபாய் பேக்-ஐ தேர்ந்தெடுக்கலாம். இதன் மூலம் அன்லிமிடெட் லோக்கல் அழைப்புகள், எஸ்.டி.டி அழைப்புகள் மற்றும் ரோமிங் அழைப்புகள் வசியைப் பெற முடியும். இதைத் தவிர்த்து ஒரு நாளைக்கு 1ஜிபி 4ஜி அல்லது 3ஜி டேட்டாவைப் பெற முடியும். 100 எஸ்.எம்.எஸ் மற்றும் வோடாபோன் ப்ளே ஆப்-க்கு சப்ஸ்கிரிப்ஷன் வசதிகளைப் பெற முடியும். இதன் வேலிடிட்டியும் 365 நாட்களாகும். ஹரியானா, கேரளா, மும்பை, பஞ்சாப் வோடாபோன் வட்டங்களில் இருக்கும் வாடிக்கையாளர்கள் இந்த பேக்-ஐ ரீசார்ஜ் செய்து கொள்ளலாம். 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here