கடும் நிதி நெருக்கடியில் சிக்கித்தவிக்கும் வோடபோன் ஐடியா நிறுவனத்தை மூடும் நிலை ஏற்படலாம் என அதன் தலைவர் குமார் மங்கலம் பிர்லா தெரிவித்துள்ளார்.

வோடஃபோன் ஐடியா நிறுவனத்திற்கு, செப்டம்பர் மாதம் வரையிலான காலாண்டில் 50 ஆயிரத்து 921 கோடி ரூபாய் வரை இழப்பு ஏற்பட்டது.

40ஆயிரம் கோடி ரூபாய் நிலுவைத் தொகையை மத்திய தொலைதொடர்புத்துறைக்கு வழங்க வேண்டிய கட்டாயத்தில் உள்ள வோடபோன் ஐடியா, மத்திய அரசு தங்களுக்கு நிவாரணம் அறிவிக்கும் என எதிர்பார்த்து வருகிறது.

இது குறித்து கருத்து தெரிவித்துள்ள வோடபோன் ஐடியா நிறுவனத் தலைவர் குமார் மங்கலம் பிர்லா, நஷ்டத்தில் இயங்கும் நிறுவனத்தில் மேலும் முதலீடு செய்ய விரும்பவில்லை என்றும், மத்திய அரசு நிவாரணம் வழங்காவிட்டால் நிறுவனத்தை மூடவுள்ளதாகவும் கூறியுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here