வோடபோன் நிறுவனம் தனது பிரீபெயிட் வாடிக்கையாளர்களுக்கு புதிய சலுகை அறிவித்துள்ளது. ரூ.597 விலையில் அறிவிக்கப்பட்டு இருக்கும் புதிய சலுகை 168 நாட்கள் வேலிடிட்டி வழங்குகிறது.

வோடபோனின் இந்தப் புதிய சலுகை ஸ்மார்ட்போன் பயனர்கள் மற்றும் ஃபீச்சர் போன் பயனர்களுக்கு தனித்தனி வேலிடிட்டியை வழங்குகிறது.

வோடபோனின் புதிய ரூ.597 சலுகையில் பயனர்களுக்கு 10 ஜிபி 4ஜி டேட்டா, தினமும் 100 எஸ்.எம்.எஸ்., அன்லிமிட்டெட் வாய்ஸ் கால், இந்தியா முழுக்க ரோமிங் உள்ளிட்டவை வழங்கப்படுகிறது. ஸ்மார்ட்போன் பயன்படுத்துவோருக்கு 112 நாட்கள் வேலி்டிட்டியும், ஃபீச்சர்போன் பயனர்களுக்கு 168 நாட்கள் வேலிடிட்டி வழங்குகிறது.

இத்துடன் அன்லிமிட்டெட் அழைப்புகளில் தினமும் 250 நிமிடங்களும், வாரத்திற்கு 1000 நிமிடங்களும், வேலிடிட்டி முழுக்க வாய்ஸ் கால் அளவு 100 எண்களுக்கு மட்டுமே வழங்கப்படுகிறது.

வோடபோனின் இப் புதிய சலுகை இந்தியா முழுக்க அனைத்து 4ஜி வட்டாரங்களிலும் அறிவிக்கப்பட்டுள்ளது. பயனர்கள் புதிய சலுகையை செயலி மற்றும் வலைத்தளம் உள்ளிட்டவற்றிலும் பெற முடியும்.

(இச் செய்தி பல்வேறு தரவுகளிலிருந்து தொகுக்கப்பட்டது.)

கருத்துகள் இல்லை

ஒரு பதிலை விடவும்