ஸ்பெயின் நாட்டிலுள்ள பள்ளி ஆசிரியை  ஒருவர் திடீரென சமூகவலைத் தளங்களின் மூலம் பிரபலமடைந்துள்ளார். அவர்  மனித உடலில் உள்ள உட்புற உறுப்புகள் அச்சிடப்பட்ட  உடையை அணிந்து கொண்டு   மாணவர்களுக்கு மனித உடல் உறுப்புகள் குறித்த பாடம் நடத்தி உள்ளார். 

வெரோனிகா டியூக் 15 ஆண்டுகளுக்கும் மேலாக ஆசிரியையாக உள்ளார்.  தற்போது 3 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு அறிவியல், ஆங்கிலம், கலை, சமூக ஆய்வுகள் மற்றும் ஸ்பானிஷ் போன்ற பல்வேறு பாடங்களை கற்பித்து வருகிறார்.

43 வயதான ஆசிரியை , உயிரியலை வேடிக்கையாகவும், கற்றுக்கொள்ள எளிதாகவும்  இருக்க மனித உடல் உறுப்புகள் அச்சிடப்பட்ட உடையுடன் வந்து பாடம் நடத்தி உள்ளார்.

இது குறித்து  ஆசிரியை கூறும்போது, இந்த இளம் குழந்தைகளுக்கு உள் உறுப்புகளின் தன்மையைக் காண்பது எவ்வளவு கடினம் என்பதை அறிந்த நான், இதை முயற்சித்துப் பார்ப்பது சிறந்தது என்று நினைத்தேன் ” என்றார்.

ஆசிரியை வெரோனிகாவின் கணவர்தனது மனைவியின்வகுப்பிற்குச் சென்று,உடற்கூறியல் விளக்கபடங்கள் அடங்கிய உடையுடன் ஆசிரியை பாடம் நடத்துவதைப் புகைப்படங்கள் எடுத்துக் கொண்டார். பின்னர் அந்த படங்களை டிவிட்டரில் வெளியிட்டார்,   13,000க்கும் மேற்பட்டமறு ட்வீட்மற்றும் 66,000 லைக்குகளுடன் அது வைரலாகிவிட்டது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here