கவிஞர் வைரமுத்து வருத்தம் தெரிவித்த பின்னரும் அவருக்கு எதிராக போராட்டங்கள் எழுவது ஏன் இயக்குநர் பாரதிராஜா கேள்வி எழுப்பியுள்ளார்.

இயக்குநர் வேலுபிரபாகரன் இயக்கத்தில் ’கடவுள் 2’ படத்தின் துவக்க விழா சென்னயில் நடைபெற்றது. இந்த விழாவில் இயக்குநர் பாரதிராஜா, நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் உள்ளிடோர் கலந்துகொண்டனர்.

இதில் பேசிய இயக்குநர் பாரதிராஜா, ஆண்டாள் குறித்த சர்ச்சை விவகாரத்தில் வைரமுத்து மன்னிப்பு கேட்ட பின்னரும் அவருக்கு எதிராக போராட்டங்கள் நடத்துவது ஏன் என கேள்வி எழுப்பினார். மேலும் அவர், வைரமுத்து என்பவர் தனிமனிதர் அல்ல என்றும் தெரிவித்தார். அரசியல் வேறு இலக்கியம் வேறு என்றும், அவரது எழுத்துபோல வைரமுத்துவும் கம்பீரமானவர்தான் எனவும் தெரிவித்தார்.

வைரமுத்துவை முன்னிலைப்படுத்தி தமிழகத்தில் கொல்லைப்புறமாக நுழைய நினைத்தால் அது முடியாது என்றும், அதனை அனுமதிக்க மாட்டோம் என்றும் தெரிவித்தார். மீண்டும் தங்களை ஆயுதம் எடுக்க வைத்து விடாதீர்கள் எனவும் எச்சரித்தார்.

இதையும் படியுங்கள்: ஒக்கி: கண்ணுக்குப் புலப்படாத மக்களுக்கு நடந்த கண்ணுக்குப் புலப்படாத பேரிடர்

கருத்துகள் இல்லை

ஒரு பதிலை விடவும்