கவிஞர் வைரமுத்துவுக்கு முன்னாள் மத்திய அமைச்சரும், காங்கிரஸ் கட்சியின் மூத்தத் தலைவருமான ப.சிதம்பரம் ஆதரவு தெரிவித்துள்ளார்.

விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தில், தமிழை ஆண்டாள் குறித்த கருத்தரங்கத்தில், கவிஞர் வைரமுத்து பேசிய சில கருத்துக்கள் கடும் விமர்சனத்திற்குள்ளாகியுள்ளது. கவிஞர் வைரமுத்துவுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஹெச்.ராஜா பேசி வரும் பேச்சுக்களும் விமர்சத்திற்குள்ளாகியுள்ளது.

கவிஞர் வைரமுத்துவுக்கு ஆதரவாக காங்கிரஸ் தலைவர் கருத்து தெரிவித்து வருகின்றனர். முன்னதாக தென் சென்னை மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர் கராத்தே தியாகராஜன், கடவுள்கள், இறையார்கள், ஊர்சாமிகள், அம்மன்களுக்கு எச்.ராஜா என்ன பவர் ஏஜெண்ட்டா என கேள்வி எழுப்பியிருந்தார்.

இந்நிலையில் முன்னாள் மத்திய அமைச்சரும், காங்கிரஸ் கட்சியின் மூத்தத் தலைவருமான ப.சிதம்பரம், ”ஆண்டாள் தமிழை ஆண்டாள்’ என்பது தமிழ் மொழிக்கும் ஆண்டாள் நாச்சியாருக்கும் பெருமை சேர்க்கும் உரை” என தெரிவித்துள்ளார்.

இதையும் படியுங்கள்: ஒக்கி: கண்ணுக்குப் புலப்படாத மக்களுக்கு நடந்த கண்ணுக்குப் புலப்படாத பேரிடர்

கருத்துகள் இல்லை

ஒரு பதிலை விடவும்