வேளாண் சட்டத்துக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டுள்ள விவசாயிகள் அனைவரும் தீவிரவாதிகள் – பாஜக தலைவர்

0
215

போராடும் விவசாயிகள் சங்கங்களில் ஒன்றான பாரதிய கிசான் யூனியனின் தேசிய செய்தித்தொடர்பாளர் ராகேஷ் திகாயத் ஒரு தீவிரவாதி என்றும் விவசாய சட்டங்களை திரும்பப் பெறுவது விவசாயிகளுக்கு நஷ்டத்தையும், காலிஸ்தானி ஆதரவாளர்களுக்கு லாபத்தையும் ஏற்படுத்தும் என்று பாஜக தலைவர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

பாஜகவைச் சேர்ந்த முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரான ஹரிநாராயண் ராஜ்பர் பேசுவதாக சமூக வலைதளங்களில் வெளியான ஒரு வீடியோவில், “விவசாய சட்டங்களுக்கு எதிரான போராட்டத்தின் போது 700 விவசாயிகள் உயிரிழந்ததற்கு ராகேஷ் திகாயத்தான் காரணம். அவர் மீது வழக்கு பதிவு செய்ய வேண்டும். இறந்த விவசாயிகளின் குடும்பங்களுக்கு இழப்பீடு வழங்க ராகேஷ் திகாயத்தின் சொத்துக்களை பறிமுதல் செய்ய வேண்டும்” என்று ஹரிநாராயண் ராஜ்பர் கூறியுள்ளார்.

ஒன்றிய அரசு இயற்றிய விவசாய சட்டங்களை நீக்கக் கோரி விவசாயிகளின் போராட்டத்தில், 700க்கும் மேற்பட்ட விவசாயிகள் உயிரிழந்ததாக விவசாயிகள் சங்க தலைவர்கள் கூறியுள்ளனர்.

மேலும், “திகாயத் உட்பட போராட்டத்தில் ஈடுபட்டுள்ள விவசாயிகள் தலைவர்கள் அனைவரும் தீவிரவாதிகள். ஒன்றிய அரசின் நெகிழ்வு தன்மையை தேவையற்ற முறையில் விவசாயிகள் சங்க தலைவர்கள் பயன்படுத்திக் கொண்டனர். போராடுபவர்கள் விவசாயிகள் அல்ல” என்று அந்த வீடியோவில்  பாஜக தலைவர் ஹரிநாராயண் ராஜ்பர் குற்றஞ்சாட்டியுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here