வேளாண் சட்டங்களுக்கு எதிரான போராட்டத்தில் எத்தனை விவசாயிகள் உயிரிழந்தனர் என்பது குறித்த தகவல்கள் அரசிடம் இல்லை – வேளாண் அமைச்சர்

0
197

புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிராக நடைபெற்று வரும் போராட்டத்தில் உயிரிழந்த விவசாயிகள் குறித்து அரசிடம் தகவல் இல்லை என்று மத்திய வேளாண்மைத் துறை அமைச்சர நரேந்திர சிங் தோமர் தெரிவித்த்துள்ளார். 

டெல்லி எல்லைகளில் நடைபெற்று வரும் விவசாயிகள் போராட்டத்தில் எத்தனை விவசாயிகள் உயிரிழந்தனர் என்பது மத்திய அரசுக்கு தெரியுமா என்று மாநிலங்களவையில் வெள்ளிக்கிழமை கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு மத்திய அமைச்சர் நரேந்திர சிங் தோமர் எழுத்துபூர்வமாக அளித்த பதில்:

போராட்டத்தின்போது எத்தனை விவசாயிகள் உயிரிழந்தனர் என்பது குறித்து மத்திய அரசிடம் தகவல் இல்லை. இந்தப் போராட்டம் தொடர்பாக இதுவரை 43 விவசாயிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். 5 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. போராட்டம் காரணமாக பொதுமக்கள் இன்னல்களை எதிர்கொண்டனர். சட்டம் ஒழுங்கை பாதுகாக்க போலீஸார் பணியமர்த்தப்பட்டது அரசுக்கு செலவினத்தை ஏற்படுத்தியது. ஆனால் இந்தப் போராட்டம் காரணமாக ஒட்டுமொத்தமாக அரசுக்கு ஏற்பட்ட இழப்புகளை அளவிட முடியாது.

மூன்று வேளாண் சட்டங்கள் தொடா்பாக விவசாயிகளிடம் உள்ள அச்சத்துக்கான காரணத்தை விசாரித்து அறிவதற்கு மத்திய அரசு நடவடிக்கை மேற்கொள்ளவில்லை என்று கூறினாா்.

வேளாண் விளைபொருள்கள் வியாபார மற்றும் வா்த்தகச் சட்டம், வேளாண் விளைபொருள்கள் விலை உத்தரவாதம் மற்றும் வேளாண் சேவைகள் சட்டம், அத்தியாவசிய பொருள்கள் திருத்தச் சட்டம் ஆகிய 3 சட்டங்களை கடந்த ஆண்டு செப்டம்பா் மாதம் மத்திய அரசு இயற்றியது. இந்தச் சட்டங்கள் விவசாயிகளுக்கு எதிரானது என்றும், அவற்றை ரத்து செய்ய வலியுறுத்தியும் பஞ்சாப், ஹரியாணா, மேற்கு உத்தர பிரதேசத்தைச் சோந்த விவசாயிகள் கடந்த ஆண்டு நவம்பா் மாதம் முதல் டெல்லி எல்லைகளில் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனா். 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here