ஊதிய உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகள் தொடர்பாக போக்குவரத்துத் துறை அமைச்சருடன் நடந்த பேச்சுவார்த்தைத் தோல்வியடைந்ததையடுத்து, வேலைநிறுத்தப் போராட்டத்தில் போக்குவரத்துத் தொழிலாளர்கள் ஈடுபட்டுள்ளனர்.

சென்னை குரோம்பேட்டையில், 13வது ஊதிய உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகள் தொடர்பாக போக்குவரத்துத் துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கருடன் 36 தொழிற்சங்க நிர்வாகிகள் பேச்சுவார்த்தை நடத்தினர்.

இந்தப் பேச்சுவார்த்தையில், போக்குவரத்துத் தொழிலாளர்களுக்கு மூன்று ஆண்டுகளுக்கொரு முறை 2.44 காரணி ஊதிய உயர்வு வழங்குவதாக தமிழக அரசு ஒப்புதல் அளித்தது. ஆனால் இந்த ஊதிய உயர்வினை எந்த காலத்திலும் ஏற்க மாட்டோம் எனக் கூறியுள்ளனர்.

மேலும் தங்களது கோரிக்கை நிறைவேறும் வரை வேலைநிறுத்தப் போராட்டம் தொடரும் எனவும் தொழிற்சங்கங்கள் அறிவித்துள்ளன. இந்தப் போராட்டத்தில் 95 சதவிகித தொழிலாளர்கள் பங்கேற்பார்கள் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த திடீர் அறிவிப்பினைத் தொடர்ந்து, சென்னை, மதுரை, கோவை, திண்டுக்கல், விருதுநகர் உள்ளிட்ட மாவட்டங்களில் பேருந்துகள் நிறுத்தப்பட்டதால் பயணிகள் கடும் அவதிக்குள்ளாகியுள்ளனர்.

இதையும் படியுங்கள்: “கப்பல் படையில் மீனவர்களைச் சேருங்கள்”

கருத்துகள் இல்லை

ஒரு பதிலை விடவும்