வேலையிழந்தவர்களுக்கு 2020 இறுதிவரை நிதியுதவி : பிரேசில் அரசு

0
250

பிரேசிலில் கொரோனாவால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

இந்நிலையில், அங்கு கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 1 லட்சத்து 20 ஆயிரத்தை கடந்துள்ளது.

லத்தீன் அமெரிக்காவில் அதிகபட்சமாக கொரோனா தொற்று மற்றும் இறப்புகள் உள்ள நாடு பிரேசிலில் தற்போதைய நிலவரப்படி, 39 லட்சத்து 52 ஆயிரத்து 790 பேருக்கு வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதனிடையே கொரோனா பெருந்தொற்று காரணமாக வேலையிழந்து தவிக்கும் மக்களுக்கு அடுத்த 4 மாதங்களுக்கும் அரசு சார்பில் நிதியுதவி வழங்கப்படும் அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது.

கடந்த மார்ச் மாதம் முதலே வேலையிழந்தவர்களுக்கு மாதம்தோறும் 600 ரியால் வழங்கப்பட்டு வந்த நிலையில், தற்போது இந்த ஆண்டு முழுவதும் வேலையிழந்த நபர்களுக்கு 300 ரியால் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அதாவது இந்திய ரூபாய் மதிப்பில் சுமார் ரூ.4000 வழங்கப்படுகிறது.

முறைசாரா துறை,  தனிநபர் நுண் தொழில் முனைவோர், சுயதொழில் செய்பவர்கள் மற்றும் சுகாதார நெருக்கடியால் வேலையிழந்தவர்கள் என அனைத்துத் தரப்பினருக்கும் நிதியுதவி வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அரசின் இந்த அவசரநிலை நிதியுதவியை 67.2 மில்லியன் பிரேசில் குடிமக்கள் பெற்று பயனடைந்து வருகின்றனர். 4.4 மில்லியன் வீடுகள் அரசின் இந்த நிதியுதவியை நம்பி இருக்கின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here