அசோக் லேலண்ட் நிறுவனம் அக்டோபர் மாதத்திலும் தனது பணியாளர்களுக்கு மீண்டும் வேலை இல்லா நாட்களை அறிவித்துள்ளது.

இந்தியாவில் கடந்த சில மாதங்களாக ஏற்பட்டுள்ள பொருளாதார மந்தநிலை காரணமாக வாகன விற்பனை சரிவு கண்டுள்ளது. இதன் காரணமாக அசோக் லேலண்ட் நிறுவனம் ஏற்கெனவே தனது பணியாளர்களுக்கு வேலை இல்லா நாட்களை அறிவித்திருந்தது. இந்நிலையில் அக்டோபர் மாதமும் இரண்டு முதல் 15 நாட்களுக்கு அசோக் லேலண்ட் நிறுவனம் தனது பணியாளர்களுக்கு வேலை இல்லா நாட்களை அறிவித்துள்ளது. நாட்டின் பல இடங்களிலும் அதன் ஆலைகளுக்கு இந்த அறிவிப்பு பொருந்தும் என தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக அசோக்லேலண்ட் நிறுவனம் தேசிய பங்குச் சந்தை நிறுவனத்திற்கு எழுதியுள்ள கடிதத்தில், விற்பனைக்கேற்ற வகையில் உற்பத்தியை சீரமைக்கும் பொருட்டு நாட்டின் பல இடங்களிலும் உள்ள ஆலைகளுக்கு இரண்டு முதல் 15 நாட்கள் வேலை இல்லா நாட்களை அக்டோபர் மாதத்தில் அறிவிப்பதாக குறிப்பிட்டுள்ளது.