வேலையின்மை , மக்களின் பசியை பொருட்படுத்தாத மோடி அரசு தேர்தலில் கவனம் செலுத்துகிறது – அகிலேஷ் யாதவ் குற்றச்சாட்டு

0
277

நாட்டில் நிலவும் வேலையின்மை ,  மக்களின் பசியை போக்க நடவடிக்கை எடுக்காத மோடி அரசு  தேர்தலிலேயே கவனம் செலுத்துவதாக சமாஜ்வாடி கட்சியின் தலைவரும் முன்னாள் உத்தரப் பிரதேச மாநில முதல்வருமான அகிலேஷ் யாதவ் குற்றம் சாட்டியுள்ளார்.

பிற மாநிலங்களில் இருந்து உத்தரப் பிரதேசத்துக்குத் திரும்பும் புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் தற்கொலை செய்துகொள்ளும் சம்பவங்கள் சில நாள்களாக உத்தர பிரதேசத்தில் நடந்தன. இது குறித்து உத்தர பிரதேச முன்னாள் முதல்வர் அகிலேஷ் யாதவ் தனது டிவிட்டர் பக்கத்தில் உத்தர பிரதேசத்தில் வேலையின்மையினால் தற்கொலைகள் அதிகரித்துள்ளது. 

கொரோனாவின் தாக்கத்தை மறந்துவிட்டு பாஜக தேர்தல்களில் கவனம் செலுத்தி வருகிறது. வேலை வாய்ப்பின்மையையும் மக்களின் பசியையும் ஒரு பிரச்னையாகவே பாஜக கருதாதபோது, எப்படி அவற்றைத் தீர்க்கப் போகிறது. விரைவில் பிகார் தேர்தல் வர உள்ளது, சில தினங்களுக்குப் பிறகு ‘நட்சத்திர பேச்சாளர்கள்’ மீண்டும் பறக்கத் தொடங்கிவிடுவார்” என்று பதிவிட்டுள்ளார். 

மற்றுமொரு பதிவில் சமாஜ்வாடி கட்சி மாணவர்களுக்கு லேப்டாப் வழங்கியது. பாஜக எல்இடி டிவிக்களை பயன்படுத்தி மக்களிடம் பிரச்சாரம் செய்கிறது . இதற்காக பாஜக கோடிக்கணக்கில் பணம் செலவழிக்கிறது  . பாஜக இதனை தேர்தல் பிரச்சாரம் இல்லை என்று சொல்கிரது அப்படியானால் எதற்கு பூத் வாரியாக எல் இடி டிவிக்களை பொருத்தியிருக்கிறார்கள்  என்று கேள்வி எழுப்பியுள்ளார் அகிலேஷ் யாதவ் 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here