கடந்த எட்டு நாட்களாக நடைபெற்று வந்த போக்குவரத்துத் தொழிலாளர்களின் வேலைநிறுத்தப் போராட்டம் வாபஸ் பெறப்பட்டது.

ஊதிய உயர்வு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, கடந்த ஜன.4ஆம் தேதி முதல், போக்குவரத்துத் தொழிலாளர்கள் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர்.

high

இந்நிலையில், போக்குவரத்துத் தொழிற்சங்கங்களுடன் பேச்சுவார்த்தை நடத்த ஓய்வுபெற்ற நீதிபதி பத்மநாபனை மத்தியஸ்தராக நியமித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. மேலும் தொழிலாளர்கள் பணிக்குத் திரும்ப வேண்டும் எனவும் உத்தரவிட்டது.

pro

இதனையடுத்து, கடந்த எட்டு நாட்களாக நடைபெற்று வந்த போராட்டம் திரும்பப் பெறப்பட்டுள்ளது. பேருந்துகள் வழக்கம்போல் இயங்கும் எனவும் தொழிற்சங்கங்கள் அறிவித்துள்ளன. இதனால் பொதுமக்கள் நிம்மதியடைந்துள்ளனர்.

இதையும் படியுங்கள்: ஒக்கி: கண்ணுக்குப் புலப்படாத மக்களுக்கு நடந்த கண்ணுக்குப் புலப்படாத பேரிடர்

கருத்துகள் இல்லை

ஒரு பதிலை விடவும்