வேலைக்காரன் வெளியீட்டு தேதியில் குழப்பம்

0
163

மோகன்ராஜா இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்துள்ள வேலைக்காரன் படத்தின் வெளியீட்டு தேதியில் மீண்டும் குழப்பம் ஏற்பட்டுள்ளது.

வேலைக்காரன் படம் செப்டம்பர் 29 வெளியாவதாக முதலில் அறிவித்தனர். படப்பிடிப்பு முடியாததால் டிசம்பர் 22 வெளியாகும் என பிறகு அறிவித்தனர். படப்பிடிப்பு ஏற்கனவே முடிந்துவிட்டதாக கூறப்பட்ட நிலையில் பாடல் காட்சிகள் சில படமாக்கப்படாமல் இருந்ததும், அவை இரு தினங்கள் முன்புதான் முடிவடைந்தன என்பதும் தெரிய வந்தது.

போஸ்ட் புரொடக்ஷன் பணிகளை விரைந்து முடித்தாலும், தணிக்கை சான்று பெற 68 தினங்கள் ஆகும் என மத்திய தணிக்கை வாரியத்தின் புதிய நெறிமுறையால் படம் டிசம்பர் 22 வெளியாகுமா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

டிசம்பர் 22 க்கு பதில் ஜனவரி 14 பொங்கலை முன்னிட்டு வேலைக்காரன் திரைக்கு வரலாம் எனவும் கூறப்படுகிறது.

இதையும் படியுங்கள் : ’இந்த நடவடிக்கையில் அதிமுக அரசு ஈடுபட்டிருப்பது கவலையளிக்கிறது

கருத்துகள் இல்லை

ஒரு பதிலை விடவும்