பேராசிரியர், இணை பேராசிரியர் வேலைக்கான காலி பணியிடங்களில் ஓ.பி.சிக்கு இடஒதுக்கீடு அளிக்காத மத்திய பல்கலைக்கழகங்கள்

0
1599

மத்திய பல்கலைக்கழகங்களில் பேராசிரியர், இணை பேராசிரியர்  வேலைக்கான காலி பணியிடங்களை நிரப்பும் ஆறுக்கும் மேற்பட்ட  விளம்பரங்களில் மற்ற பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான (OBC) இடஒதுக்கீடு இடம் பெறவில்லை.

மத்திய உயர் கல்வி நிறுவனங்களில் அனைத்து ஆசிரியர் பணியிடங்களை நிரப்பும்போதும் ஓபிசி இடஒதுக்கீடு வழங்கப்பட வேண்டும் என மார்ச் மாதம் சட்டம் இயற்றப்பட்டது. ஆனால், அதிகாரிகள்    அதற்கான ஆணைகளை  இதுவரை பல்கலைக்கழகங்களுக்கு அனுப்பவில்லை.

 தமிழ்நாடு மத்திய பல்கலைக்கழகம், பஞ்சாப் மத்திய பல்கலைக்கழகம், மணிப்பூர் பல்கலைக்கழகம், டாடா சமூக அறிவியல் கல்வி நிறுவனம், மகாத்மா காந்தி மத்திய பல்கலைக்கழகம் மற்றும் இந்திரா காந்தி தேசிய பழங்குடியின பல்கலைக்கழகம் ஆகியவை ஆசிரியர் பணியிடங்கள் குறித்து விளம்பரங்களை வெளியிட்டிருந்தன.

இந்த விளம்பரங்களில் ஓபிசி பிரிவுக்கான இடஒதுக்கீடு குறைந்த மட்டத்திலான துணை பேராசிரியர் பணியிடங்களுக்கு மட்டும் அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் பேராசிரியர், இணை பேராசிரியர் பணியிடங்களுக்கு இடஒதுக்கீடு அறிவிக்கப்படவில்லை.

உதாரணத்துக்கு, மணிப்பூர் பல்கலைக்கழகம் பேராசிரியர் பணிக்கு 25 இடங்களிலும், இணை பேராசிரியர் பணிக்கு 51 இடங்களிலும் துணை பேராசிரியர் பணிக்கு 39 இடங்களிலும் விண்ணப்பங்கள் வரவேற்கபடுகின்றன என்று விளம்பரம் தெரிவித்திருந்தது . இதில் துணை பேராசிரியர் பணிக்கு மட்டும் 9 இடங்களுக்கு ஓபிசி இடஒதுக்கீடு இருக்கிறது  என  அந்த விளம்பரத்தில் தெரிவிக்கப்பட்டிருந்தது.  

பெரிய பணியிடங்களுக்கு  2 ஓபிசி இடங்கள் என்றால் , பேராசிரியர் பணியிடத்துக்கு  5 ஒபிசி இடங்களும், இணை பேராசிரியர் பணியிடத்துக்கு 10 ஓபிசி இடங்களும் ஒதுக்கி இருக்க வேண்டும். 

டாடா சமூக அறிவியல் கல்வி நிறுவனம் ஆறு பேராசிரியர் பணிக்கும், 10 இணை பேராசிரியர் பணிக்கும் 23 துணை பேராசிரியர் பணிக்கும் விண்ணப்பங்களை வரவேற்பதாக விளம்பரம் அறிவித்திருந்தது. இதிலும் துணை பேராசிரியர் பணிக்கு மட்டுமே இடஒதுக்கீடு பின்பற்றப்பட்டிருக்கிறது.

மார்ச் மாதம் சட்டம் இயற்றப்பட்ட பிறகு கர்நாடக மத்திய பல்கலைக்கழகம் அறிவித்த விளம்பரங்களிலும் இந்த நிலையையே காண முடிந்தது.

டெல்லி பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த பட்டியலின, பழங்குடியின மற்றும் ஓபிசி ஆசிரியர்கள் அமைப்பின் தலைவரான ஹன்ஸ்ராஜ் சுமன், இது வெளிப்படையான சட்ட மீறல் என தெரிவிக்கிறார்.

உயர்கல்வியை  முறைப்படுத்தும் பல்கலைக்கழக மானிய ஆணைக் குழுவுக்கும் தேசிய பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்துக்கும் இது குறித்து கடிதம் எழுதியிருக்கிறோம். மேற்படியான விளம்பரங்கள் திருத்தப்படவில்லை என்றால் நாங்கள் நீதிமன்றம் செல்வோம் என தெரிவித்துள்ளார் சுமன்.

14 வருடங்களுக்குப் பிறகு 1993-இல்  அரசு பணிகளில் ஓபிசி இடஒதுக்கீடு  சட்டமாக்கப்பட்டது. ஆனால் பல்கலைக்கழகங்கள், ஆசிரியர் பணியிடங்களுக்கு அதை செயல்படுத்தவில்லை. 2007-ஆம் ஆண்டு ஆரம்ப கட்ட பணியிடங்களில் மட்டும் அதை செயல்படுத்தம்படுத்தும்படி கேட்டுக்கொண்டது. எனவே, அதன் அடிப்படையில் மத்திய பல்கலைக்கழகங்கள், துணை பேராசிரியர் பணியிடங்களுக்கு மட்டுமே ஓபிசி இடஒதுக்கீட்டை அமலாக்கியுள்ளன.

பழங்குடியினரும் பட்டியல் வகுப்பினரும் ஆசிரியர் பணியிடங்களில் அனைத்து மட்டங்களிலும் முழுமையான இடஒதுக்கீட்டு நலனை பெற்றிருக்கின்றனர்.

12 ஆண்டுகளுக்கு முந்தைய வழிகாட்டுதலை பின்பற்றி மத்திய பல்கலைக்கழகங்கள் வெளியிட்ட விளம்பரங்களை நியாயப்படுத்துகின்றன.  உயர்கல்வி செயலாளர் ஆர். சுப்ரமணியம், சமீபத்திய விளம்பரங்களில் உள்ள தவறை ஒப்புக்கொள்கிறார்.

இந்த விளம்பரங்களில் பிழை இருக்கிறது. நேரடியாக பணியை நிரப்பும் அனைத்து பணியிடங்களுக்கு இடஒதுக்கீடு பொருந்தும். அமைச்சரகம் இதுகுறித்து விளக்க அறிக்கை வெளியிடும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

பல்கலைக்கழகங்கள் வெளியிட்ட விளம்பரங்களில் உயர்ஜாதியினருக்காக ஒதுக்கப்பட்ட 10% இடஒதுக்கீடும் இல்லை. 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here