வேலூர் சிறையிலிருந்து, ஒரு மாத கால பரோலில் பேரறிவாளன் விடுவிக்கப்பட்டுள்ளார்.

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் முருகன், நளினி, சாந்தன், பேரறிவாளன் உள்ளிட்ட ஏழு பேர் கடந்த 26 ஆண்டுகளாக சிறைத் தண்டனை அனுபவித்து வருகின்றனர். இதில், உடல்நலக்குறைவால் கடந்த பல மாதங்களாக அவதிப்பட்டு வரும் தனது தந்தையைப் பார்க்க 30 நாட்கள் பரோலில் விட வேண்டும் என சிறைத் துறையினரிடம் பேரறிவாளன் மனு அளித்து இருந்தார். மேலும், பேரறிவாளனைப் பரோலில் விடுவிக்க பல்வேறு தரப்பினரும் கோரிக்கை விடுத்து வந்தனர். இந்நிலையில், 26 ஆண்டுகளாக சிறையிலிருந்து வரும், பேரறிவாளனுக்கு முதல் முறையாக பரோல் வழங்கி தமிழக அரசு உத்தரவிட்டது. இதற்கான அரசாணையை தமிழக அரசு, வேலூர் மத்திய சிறைக்கு அனுப்பியது.
இதனைதொடர்ந்து வியாழக்கிழமை (இன்று) இரவு ஒன்பது மணியளவில், வேலூர் சிறையிலிருந்து, ஒரு மாத கால பரோலில் அவர் விடுவிக்கப்பட்டுள்ளார்.

இதையும் படியுங்கள்: “ஓர் எழுத்துப் பிழைகூட இல்லாமல் முரசொலியைக் குழந்தைபோல காத்தார் கலைஞர்”

கருத்துகள் இல்லை

ஒரு பதிலை விடவும்