வேறு வேலை இல்லையா? சன்ரைசர்ஸ் அணியை ஏன் கேட்கக்கூடாது? : நடிகை ராதிகா

0
124

முரளிதரனின் வாழ்க்கை வரலாற்றுப் படத்தில் விஜய் சேதுபதி நடிக்கக்கூடாது என்று சொல்பவர்களை விளாசியுள்ளார் நடிகை ராதிகா. 

இலங்கை கிரிக்கெட் வீரர் முத்தையா முரளிதரனின் வாழ்க்கை வரலாற்றுப் படத்தில் விஜய் சேதுபதி நடிக்கிறார். இப்படத்துக்கு 800 என பெயர் வைக்கப்பட்டுள்ளது. 

இந்நிலையில்,  இலங்கை அரசுக்கு ஆதரவளிக்கும் முரளிதரனின் வாழ்க்கை வரலாற்றுப்படத்தில் விஜய் சேதுபதி  நடிக்கக்கூடாது எனப் பலரும்எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.அரசியல் கட்சித் தலைவர்கள், இலங்கைத் தமிழர்கள், இயக்குநர் பாரதிராஜா, சீனு ராமசாமி, சேரன் உள்ளிட்ட பலரும் விஜய் சேதுபதி   வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

முரளிதரனாக விஜய் சேதுபதி நடிப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து சமூகவலைத்தளங்களில் பலரும் பதிவுகள் எழுதியுள்ளார்கள்.
#ShameOnVijaySethupathi என்கிற ஹேஷ்டேக் டிவிட்டரில் டிரெண்டானது. 

இந்நிலையில் விஜய் சேதுபதிக்கு ஆதரவு தெரிவித்து நடிகை ராதிகா, டிவிட்டரில் கூறியதாவது:

முத்தையா முரளிதரனின் வாழ்க்கை வரலாற்றுப் படத்தில் விஜய் சேதுபதி நடிக்கக் கூடாது என்று சொல்பவர்களுக்கு வேறு வேலை இல்லையா? சன்ரைசர்ஸ் அணியை ஏன் கேட்கக்கூடாது? முரளிதரன் அதில் தலைமைப் பயிற்சியாளராக உள்ளார். அந்த அணி அரசியல் தொடர்புடைய தமிழருடையது. விஜய் சேதுபதி ஒரு நடிகர். அவரைத் தடுக்கவேண்டாம். விஜய்சேதுபதி, கிரிக்கெட் இரண்டுக்கும் முட்டாள்தனம் தேவையில்லை என்றார்.

சன் ரைசர்ஸ் அணி கலாநிதி மாறன் உடையது. அவருடைய சன் தொலைக்காட்சியில் தான் ராதிகாவின் ராடன் மீடியா நிறுவனம் தயாரித்து வரும் ‘சித்தி 2’ தொடர் ஒளிபரப்பாகி வருகிறது. இதனைக் குறிப்பிட்டு பலரும் ராதிகாவிடம் கேள்வி கேட்கத் தொடங்கினார்கள்.

பிறகு சன் டிவி பற்றிய தனது கருத்துகளுக்கு விளக்கமளித்து அவர் மேலும் டிவீட் ஒம்றைப் பதிவு செய்தார். அதில்,

சன்ரைசர்ஸ், சன் டிவியின் உரிமையாளர்களுக்கு அரசியல் தொடர்பு இருந்தாலும் இத்தனை ஆண்டுகளாக அரசியல், விளையாட்டு, பொழுதுபோக்கு ஆகியவற்றைத் தொழில்ரீதியாக அணுகியுள்ளார்கள். நம் திரைத்துறையும் கேளிக்கையை அரசியல் கோணத்தில் பார்ப்பதை ஏன் தவிர்க்கக்கூடாது?

என்னுடைய அந்த டிவீட்டின் நோக்கம், சர்ச்சையை உருவாக்குவதல்ல. திரைத்துறைக்கும் அதன் கலைஞர்களுக்கும் ஆதரவளிப்பதுதான். சன்ரைசர்ஸின் பாரபட்சமற்ற, நடுநிலையான, தொழில்நெறி சார்ந்த அணுகுமுறையைச் சுட்டிக்காட்டியுள்ளேன்.” என்றார். 

ஐபிஎல் போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் பந்துவீச்சுப் பயிற்சியாளராக முத்தையா முரளிதரன் உள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here