வேர்ல்டு டூருக்கு உங்களை அழைக்கும் தொழிலதிபர் ஆனந்த் மகிந்திரா

Where should your next holiday be? Find out below.

0
107

இந்தியாவின் மிகப்பெரிய தொழிலதிபர்களில் ஒருவராக அறியப்படும் ஆனந்த் மகிந்திரா பகிர்ந்த விடுகதை ஒன்று டிவிடட்ரை அலற வைத்துள்ளது.

கொரோனா ஊரடங்கு  தளர்வுகள் வந்தாலும் கூட அது வாழ்வாதாரத்துக்கானதே தவிர வழக்கம்போல் இயல்பாக இருப்பதற்கு அல்ல என்பது பெரும்பாலானோருக்குப் புரிவதில்லை.

கொரோனா தற்காப்பு நடவடிக்கைகளை மக்கள் பின்பற்ற அரசாங்கம் தொடர்ந்து விழிப்புணர்வுப் பிரச்சாரங்களை மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில், ஆனந்த் மகிந்திரா தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்ட டிவீட் அதன் முக்கியத்துவத்தை உணர்த்தியுள்ளது.

அது ஒரு கணித விளையாட்டு. உங்களின் அடுத்த பயண இலக்கைக் கண்டு கொள்ளுங்கள் என்பதுதான் விளையாட்டின் தலைப்பு. அந்தத் தலைப்பின் கீழ் ஒரு பட்டியலைப் பகிர்ந்துள்ளார் ஆனந்த் மகிந்திரா. அதில் இடதுபுறம் சில அறிவுரைகளும், வலதுபுறம் 15 நாடுகளின் பெயர்களும் இடம்பெற்றுள்ளன.

முதலில் இடதுபுறமுள்ள அறிவுரைகளைப் பின்பற்ற வேண்டும். முதற்படியாக 1-ல் இருந்து 9-க்குள் ஒரு எண்ணை நினைத்துக்கொள்ள வேண்டும். பின்னர் அதை 3-ஆல் பெருக்கவேண்டும். கிடைக்கும் எண்ணுடன் 3-ஐ கூட்ட வேண்டும். அப்படிச் செய்தால் இரண்டு இலக்க எண் கிட்டும்.

அந்த இரண்டு இலக்கங்களையும் கூட்ட வேண்டும். வலதுபுறம் இருக்கும் பட்டியலில் அந்த எண்ணுக்கு எதிராக என்ன எழுதியிருக்கிறதோ அங்குதான் பயணப்பட வேண்டும். இத்துடன் கேம் ஓவர். ஆனால், அங்குதான் டிவிஸ்ட் வைத்திருக்கிறார் ஆனந்த் மகிந்திரா. எந்த எண்ணை மனதில் நினைத்துக் கொண்டு கணக்கு செய்தாலும் விடை ஸ்டே அட் ஹோம் (Stayat home) என்றே வரும்.

இந்த விளையாட்டின் மூலம் வீட்டில் இருப்பதன் அவசியத்தை உணர்த்திய ஆனந்த் மகிந்திராவுக்கு பலரும் தமது பாராட்டுகளைத் தெரிவித்து வருகிறார்கள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here