வெஸ்பா மாடல்களுக்கு குறுகிய கால சலுகை அறிவிப்பு

Piaggio India has announced special offers and benefits on its Vespa and Aprilia two-wheeler range, which will be valid till November 16, 2020.

0
82

இத்தாலியைச் சேர்ந்த பியாஜியோ வாகன தயாரிப்பு நிறுவனத்தின் கீழ் செயல்படும் வெஸ்பா ஸ்கூட்டகர்கள், இந்தியா உட்படபல்வேறு நாடுகளில் ப்ரீமியம் தரத்திலான ஸ்கூட்டர்களை விற்பனை செய்து வருகின்றன.

இந்திய ஸ்கூட்டர் மார்க்கெட்டில் பிரிமீயம் வகை மாடல்களாக வெஸ்பா ஸ்கூட்டர்கள் விளங்குகின்றன. பாரம்பரியம் மிக்கடிசைன் அம்சங்களுடன் தனித்துவமான வெஸ்பா ஸ்கூட்டர்கள் இந்தியாவிலும் குறிப்பிடத்தக்க இடத்தை பிடித்துள்ளன.

இந்நிலையில், பியாஜியோ குழுமம் தேர்வு செய்யப்பட்ட தனது பிரீமியம் வெஸ்பா மற்றும் அப்ரிலியா ஸ்கூட்டர் மாடல்களுக்கு அதிகபட்சம் ரூ. 10 ஆயிரம் வரையிலான சலுகைகள் வழங்கப்படுகின்றன.

இவை குறுகிய கால சலுகையையாக அறிவிக்கப்பட்டிருக்கின்றன.

அதன்படி, வெஸ்பா விஎக்ஸ்எல் மற்றும் எஸ்எக்ஸ்எல் மாடல்களுக்கும், அப்ரிலியாஎஸ்ஆர் 160, எஸ்ஆர் 125 மற்றும் ஸ்டாம் 125 மாடல்களுக்கு சலுகைகள் வழங்கப்படுகின்றன. இந்த மாடல்களுக்கு ரூ. 10 ஆயிரம் மதிப்புள்ள சலுகைகள் வழங்கப்படுகின்றன. 

இவற்றில் ரூ. 7 ஆயிரம் மதிப்புள்ள இன்சூரன்ஸ், ரூ. 4 ஆயிரம் மதிப்புள்ள இலவச அக்சஸரீக்களும் அடங்கும். இத்துடன் ஒரு ஆண்டுக்கான இலவச சர்வீஸ் மற்றும் ஐந்து ஆண்டுகளுக்கு வாரண்டி வழங்கப்படுகிறது. இதில் முதல் இரு ஆண்டுகளுக்கு ரோடு-சைடு அசிஸ்டண்ஸ் வசதியும் வழங்கப்படுகிறது.

மேலும் ஆன்லைன் தளத்தில் ஸ்கூட்டர்களை வாங்குவோருக்கு ரூ. 2 ஆயிரம் தள்ளுபடி வழங்கப்படுகிறது. இந்த  சலுகைகள் நவம்பர் 16 ஆம் தேதி வரை வழங்கப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here