3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் வெஸ்ட்இண்டீஸ் சென்றுள்ள இலங்கை அணி விளையாடி வருகிறது. முதல் போட்டியில் வெஸ்ட்இண்டீஸ் அணி வெற்றி பெற்றது. இந்நிலையில் இரண்டாவது டெஸ்ட் போட்டி நேற்று செய்ண்ட் லூசியாவில் ஆரம்பித்தது. டாஸ் வென்று இலங்கை அணி பேட்டிங் தேர்வு செய்தது.

தொடக்க ஆட்டக்காரர்களாக இலங்கை அணியின் குசால் பெரேரா, மஹேலா உடாவாட்டே ஆகியோர் களமிறங்கினர். உடாவாட்டே டக்-அவுட் ஆனார். அதன்பின் களமிற்ங்கிய தனஞ்ஜெயா டி சில்வா 12 ரன்களிலும் அதைத்தொடர்ந்து குசால் பெரேரா 55 பந்தில் 32 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். அதன்பின் கேப்டன் தினேஷ் சந்திமால் களமிறங்கினார். குசால் மெண்டிஸ் 45 ரன்கள் எடுத்து வெளியேற அதன்பின் வந்தவர்கள் ரன் எடுக்க முடியாமல் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். சந்திமால் நிலைத்து நின்று சதம் அடித்தார்.இவர் 186 பந்துகளில் 119 அடித்து ஆட்டமிழக்காமல் இருந்தார்.

Dfr2lLqUwAAeeYx

இலங்கை அணி முதல் இன்னிங்சில் 79 ஓவர்களில் 253 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. வெஸ்ட்இண்டீஸ் அணி பந்துவீச்சில் ஷானோன் காபிரியல் 5 விக்கெட்களும், கீமர் ரோச் 4 விக்கெட்களும் வீழ்த்தினர்.

இதையடுத்து வெஸ்ட்இண்டீஸ் அணி முதல் இன்னிங்சில் பேட்டிங் செய்தது. தொடக்க ஆட்டக்காரர்களாக கிரேக் பிராத்வெய்ட், டெவான் ஸ்மித் ஆகியோர் களமிறங்கினர். முதல் நாள் ஆட்டநேர முடிவில் வெஸ்ட்இண்டீஸ் அணி 2 ஓவர்களில் 2 ரன்கள் எடுத்துள்ளது.

கருத்துகள் இல்லை

ஒரு பதிலை விடவும்