வெள்ள மீட்புப் பணியில் முஸ்லிம்களின் மாபெரும் பங்கு…

1
315

மழை நீருக்கும், வெள்ளப் பெருக்கிற்கும் உடைமைகளை கொடுத்துவிட்டு உயிரை மட்டும் கையில் பிடித்துக் கொண்டு நடுரோட்டில் நின்றவர்களுக்கும், மொட்டை மாடியில் உயிருக்கு போராடியவர்களுக்கும் கை கொடுத்து துணை நின்று மீட்புப் பணியில் தன்னை கரைத்துக் கொண்டனர் தவ்கீத் ஜமாத், தமுமுக, எஸ்டிபிஐ உள்ளிட்ட இஸ்லாமிய அமைப்பினர்.

23189983449_240c5f15e4_z 1

யாரும் நினைத்துப் பார்க்க முடியாத பல அரிய செயல்களை செய்து இந்துக்களின் மத்தியிலும், அடித்தட்டு மக்கள் மத்தியிலும் நீங்காப் பெயர் பெற்றுள்ள இவர்களில் தவ்கீத் ஜமாத் அமைப்பில் இருந்து மட்டும் சுமார் 30 ஆயிரம் பேர் வெள்ளப் பெருக்கில் இறங்கி மக்களை காப்பாற்றியுள்ளனர்.

ராணுவம், பேரிடர் மேலாண்மை மீட்புக் குழு என என்பதாயிரம் பேரை அரசு மீட்புப் பணியில் ஈடுபட வைத்த போதும், பிணங்கள், கர்ப்பிணிப் பெண், முதியவர்கள், நீரில் தத்தளித்தவர்களை மீட்க இன்னும் தேவைப்படும் ஒரு ராணுவமாக அவர்களின் செயல்பாடுகள் அமைந்தன.

23189983449_240c5f15e4_z 2

தமுமுக சார்பில் சென்னை, கடலூர், திருவள்ளூர், காஞ்சிபுரம் ஆகிய நான்கு மாவட்டங்களில் மட்டும் சுமார் இரண்டு கோடி ரூபாய்க்கு நிவாரணப் பொருட்களை வழங்கப்பட்டுள்ளது. முன்னதாக நீரில் தத்தளித்த மக்களை மீட்க சுமார் 10 ஆயிரம் படகுகள் பயன்படுத்தப்பட்டுள்ளதாக மனித நேய மக்கள் கட்சியின் தலைவர் ஜவாஹிருல்லா தெரிவித்துள்ளார்.

imam_2644934f

கனமழை பெய்து வீடுகளில் வெள்ளம் புகுந்த உடன் அனைத்து பள்ளி வாசல்களையும் மக்களுக்காக திறந்து வையுங்கள் என்று தலைமை இமாம் கூறினார். அதனையடுத்து உள்ளே நுழைந்த மக்களுக்கு, இந்துவானாலும், முஸ்லிம்களானாலும் வெள்ளம் வற்றும் வரை பாதுகாப்பையும், உணவையும் வழங்கி காத்தது மசூதிகள் என்பது குறிப்பிடத்தக்கது.

1 கருத்து

  1. உண்மையை சொன்னதற்கு நன்றி. அவர்கள் எதிர்பார்த்த கூலி நிச்சயம் கிடைக்கும் அந்த அல்லாஹ்விடம். மக்களின் பாராட்டு உத்வேகத்தை கொடுத்தது என்றே சொல்லலாம்!!!

ஒரு பதிலை விடவும்