வெள்ளத்தில் மூழ்கிய கஜிரங்கா உயிரியில் பூங்கா ; வீட்டிற்குள் புகுந்து கட்டிலில் படுத்து உறங்கிய புலி

0
267

அஸ்ஸாம் வெள்ளம் காரணமாக ஊருக்குள் புகுந்த புலி ஒன்று கட்டிலில் படுத்துக் கொண்டது. அதனை வெளியேற்றும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. 


அஸ்ஸாமில் கஜிரங்கா உயிரியல் பூங்கா உள்ளது. இங்கு ஒற்றைக் கொம்பு காண்டா மிருகம், சிங்கம், புலி உள்ளிட்ட விலங்குகள் உள்ளன. இந்த நிலையில் அங்கு ஏற்பட்ட கனமழை வெள்ளத்தால் உயிரியல் பூங்கா கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.

நூற்றுக்கணக்கான சிறிய விலங்குகள் வெள்ளத்தில் உயிரிழந்த நிலையில் புலி போன்ற சற்று பெரிய விலங்குகள் வனப்பகுதியில் இருந்து நீண்ட தூரத்திற்கு செல்லத் தொடங்கியுள்ளன. 

இந்த நிலையில் வங்க இனத்தை சேர்ந்த புலி ஒன்று காட்டை விட்டு தேசிய நெடுஞ்சாலையை தாண்டி ஊருக்குள் புகுந்து அங்கிருந்த வீட்டிற்குள் சென்று விட்டது.

அதிர்ஷ்ட வசமாக வெள்ளத்தால் வெளியேற்றப்பட்டபோது இந்த வீட்டில் இருந்தவர்களும் வெளியேறி விட்டனர். இந்த நிலையில் வீட்டுக்குள் சென்ற புலி கட்டிலில் படுத்துக் கொண்டது. இதனை வெளியே இருந்த ஓட்டையின் வழியே பார்த்தவர்கள் அதனை புகைப்படம் எடுத்து இணையத்தில் வெளியிட்டுள்ளனர். 

புலியை மீண்டும் காட்டுக்குள் அனுப்பும் பணியை வனத்துறையினர் தொடங்கியுள்ளனர். இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு ஏற்பட்ட வெள்ளத்தில் 31 காண்டா மிருகம், புலி உள்பட 360 விலங்குகள் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here