தைவானைச்  சேர்ந்த ‘ஹெச்டிசி’  நிறுவனம்  நீண்ட இடைவெளிக்குப் பின் இந்தியாவில் ‘டிசையர் 19+’(HTC Desire 19+) என்ற புதிய மாடல் ஸ்மார்ட்போனை இந்தியாவில் அறிமுகப்படுத்தவிருக்கிறது.  

இந்த மாடல் தைவானில் ரிலீசாகி சக்கை போடு போட்டுக் கொண்டிருக்கிறது. இந்தப் போனின் அறிமுகம் ஹெச்டிசி நிறுவனத்துக்கு இந்தியாவில் பெரிய கம்பேக்காக இருக்கும்என நம்பப்படுகிறது. 

இதன் சிறப்பங்சங்களாக 6.2 இன்ச்சில்ஹெச்.டிடிஸ்பிளே, 720×1520 பிக்ஸலில் ரெசல்யூசன், ஒருநாள் முழுக்க சார்ஜ் நிற்க 3,850 எம்.ஏ.ஹெச் பேட்டரி திறன், 4 ஜிபிரேம், 64 ஜிபிரேம், ஃபிங்கர் பிரின்ட் லாக்-இன் வசதி, ஸ்னாப்டிராகன் 710 SoC உடன் மீடியா டெக் ஹெலியோபி35 பிராசஸர் ஆகியவற்றுடன் சந்தைக்கு வருகிறது.

இதன் கேமராவைப் பொறுத்தவரை இந்த ஸ்மார்ட்போன் டிரிபிள் கேமரா அமைப்புடன்வருகிறது. 13 எம்பியில் பிரைமரி சென்சாருடன் கூடிய மெயின் கேமரா, 8 எம்பியில் செகண்டரி சென்சாருடன் வைடு ஆங்கிள் லென்ஸ் பொருத்தப்பட்ட கேமரா, 5 எம்பியில் டெரிட்டரி,டெப்த்-சென்சிங் சென்சாருடன் ஒரு கேமரா என மூன்று பின்புற கேமராக்கள், அத்துடன் 16 எம்பியில் செல்ஃபி கேமரா, என அசத்துகிறது இந்த போன்.

4 ஜிபி ரேம் மற்றும் 64 ஜிபி மெமரி மாடல், எச்.டி.சி டிசையர் 19+, 9990 தைவான் டாலர்களுக்கும் (இந்திய மதிப்பில் சுமார் ரூ. 22,100) , இதன் 6 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி மாடல், 10,990 தைவான் டாலர்களுக்கும் (இந்திய மதிப்பில் சுமார் ரூ. 24,300) கிடைக்குமென எதிர்பார்க்கப்படுகிறது.  

இந்த ஸ்மார்ட்போன் இண்டிகோ மற்றும் ஜாஸ்மின்ஒயிட் ஆகிய இரு  வண்ணங்களில்  கிடைக்கும்.  இந்த ஸ்மார்ட்போன்கள் எப்போது இந்தியா மற்றும் பிற சந்தையில் அறிமுகம் செய்யப்படும் என்பது குறித்து இப்போது எந்த தகவலும் இல்லை.