வெளியீட்டு மேடையிலேயே “நாட்டை உலுக்கும் ரஃபேல் பேர ஊழல்” புத்தகம் 8 ஆயிரம் பிரதிகள் விற்பனை

0
1206

“நாட்டை உலுக்கும் ரஃபேல் பேர ஊழல்” என்ற புத்தகம் வெளியிடப்பட்ட சில மணி நேரங்களில் 8 ஆயிரம் புத்தகங்களும், 1 லட்சம் பிடிஎஃப் பிரதிகளும் விற்றுள்ளன.

“நாட்டை உலுக்கும் ரபேல் பேர ஊழல்” என்ற  புத்தகம் வெளியிடப்பட்டுள்ளது. அந்தப் புத்தகம் வெளியிடப்பட்ட சில மணி நேரங்களிலேயே அச்சிடப்பட்ட 8 ஆயிரம் புத்தகங்களும் விற்பனையாகியுள்ளன. மேலும், 10 ஆயிரம் புத்தகங்கள் விற்பனைக்காக முன்பதிவு செய்யப்பட்டுள்ளது. ஒரு புத்தகத்தின் விலை ரூ.15 ஆகும். இதுதவிர புத்தகத்தின் பிடிஎஃப் பிரதிகள் 1 லட்சம் டவுண்லோட் செய்யப்பட்டுள்ளன. பிடிஎஃப் பிரதி இலவசம் . 

பாரதி புத்தகாலயம் சார்பில் ‘நாட்டை உலுக்கும் ரஃபேல் பேர ஊழல்’ என்கிற நூல் வெளியிடப்பட இருந்த நிலையில் அதற்குத் தடை விதித்து புத்தகங்களை பறிமுதல் செய்தனர்  மாவட்ட தேர்தல் அதிகாரிகள்.   தடை விதிக்கவோ , புத்தகங்களை பறிமுதல் செய்யவோ எந்த உத்தரவும் இடவில்லை என தமிழக தேர்தல் அதிகாரி கூறியுள்ளார். 

பாரதி புத்தகாலயம் மூலம் விஜயன் என்பவர் ‘நாட்டை உலுக்கும் ரஃபேல் பேர ஊழல்’ இன்று வெளியிடப்படுவதாக இருந்தது. நூலை இந்து குழுமத் தலைவர் என்.ராம் வெளியிடுவதாக இருந்தது.

கேரள சமாஜத்தில் புத்தகம் வெளியிடப்படுவதாக இருந்த நிலையில் ஆயிரம் விளக்கு, தேர்தல் பறக்கும்படை அதிகாரி எஸ்.ரமேஷ் பெயரில் பாரதி புத்தகாலய மேலாளர் நாகராஜனுக்கு திடீரென ஒரு கடிதம் அனுப்பப்பட்டது                     

தேர்தல் விதிமீறல் உள்ளதால் புத்தகம் வெளியிடத் தடை விதிக்கப்பட்டதாகக் கூறப்பட்டது. 

இந்நிலையில் திடீரென ஆயிரம் விளக்கு தேர்தல் பறக்கும் படையினர் போலீஸார் துணையுடன் புத்தக நிறுவனத்தில் நுழைந்து வெளியீட்டிற்காக வைக்கப்பட்டிருந்த 142 புத்தகங்களைப் பறிமுதல் செய்து கொண்டு சென்றனர். அதற்கான ரசீதும் வழங்கவில்லை.

தேர்தல் நேரத்தில் புத்தகங்கள் வெளியிடுவது வழக்கமான நடைமுறைதான். இதற்கும் அரசியலுக்கும் சம்பந்தமில்லை. நாங்கள் எந்தக் கட்சியையும் ஆதரிக்கவில்லை. அதே நேரம் இதுகுறித்து தமிழக தேர்தல் அதிகாரியிடம் புகார் அளிக்க உள்ளோம். அங்கும் நீதி கிடைக்காவிட்டால் நீதிமன்றம்மூலம் நடவடிக்கை எடுப்போம் என்று  பாரதி புத்தகாலய மேலாளர் நாகராஜன் கூறியிருந்தார். 

இது ஜனநாயக விரோத, சட்டவிரோத நடவடிக்கை. கருத்துச் சுதந்திரம், பேச்சு சுதந்திரத்துக்கு எதிரான செயல் என்று இந்து குழுமத் தலைவர் என்.ராம் கண்டித்திருந்தார். 

இந்நிலையில் சென்னை தேர்தல் அதிகாரிகளின் நடவடிக்கை குறித்து செய்தியாளர்கள் தமிழகத் தேர்தல் அதிகாரியிடம் கேள்வி எழுப்பினர்.

அது குறித்து பதிலளித்த தமிழக தேர்தல் அதிகாரி, புத்தகங்களைப் பறிமுதல் செய்வது சம்பந்தமாக இந்திய தேர்தல் ஆணையமோ, தமிழக தேர்தல் அதிகாரியோ எந்தவித உத்தரவும் இடவில்லை.  இதுசம்பந்தமாக மாவட்ட ச்ட்க்ஷ்சர்தல் அதிகாரியிடம் உடனடியாக அறிக்கை கேட்டுள்ளேன் என்று தெரிவித்தார்.

  இதுதொடர்பாக விசாரணை செய்து அரசுக்கு அறிக்கை தாக்கல் செய்யும்படி மாவட்ட தேர்தல் அதிகாரிக்கு உத்தரவிட்டிருப்பதாகவும் தமிழக தேர்தல் அதிகாரி கூறியுள்ளார். 

 புத்தக பறிமுதல் விவகாரம் குறித்து தமிழக தேர்தல் அதிகாரியிடம் தலைமை தேர்தல் ஆணையம் விளக்கம் கேட்டுள்ளது. 

இந்த புத்தகம், பிடிஎப் வடிவில் இந்த இணைப்பில் கிடைக்கும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here