வெளியானது பப்ஜி லைட்

0
568

இந்தியாவில் மிகவும் பிரபலமாக உள்ள பப்ஜி மொபைல் கேம் தற்போது லைட் வெர்ஷன் ஒன்றை ரிலீஸ் செய்துள்ளது. பிலிப்பைன்ஸில் பப்ஜி லைட் கேம் சுமார் ஓராண்டுக்கு முன்னர்தான் அறிமுகம் செய்யப்பட்டது. மிகவும் குறைந்த திறனுடைய ஸ்மார்ட் போன்களுக்காக இந்த மொபைல் கேம் உருவாக்கப்பட்டுள்ளது. 

பப்ஜி மொபைல் லைட் கேமை, கூகுள் ப்ளே ஸ்டோரில் இருந்து தரவிறக்கம் செய்து கொள்ளலாம். பப்ஜி மொபைல் கேம் உருவாக்கப்பட்டதைப் போன்றே, லைட்டும், ‘அன்ரியல் இஞ்சின் 4′ கொண்டே உருவாக்கப்பட்டுள்ளது. இந்த லைட் கேமில், 60 பேர் மட்டுமே விளையாட முடியும். பப்ஜி மொபைல் கேமில், 100 பேர் விளையாட முடியும்.

இந்நிலையில்,பப்ஜி மொபைல் கேமிற்கு, வெர்ஷன் 0.12.0 அப்டேட் கொடுக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் ‘ஆர்பிஜி-7′ ஆயுதம் மற்றும் ‘பக்கி’ வாகனம், அதுமட்டுமல்லாமல் புதிய இடமும் அறிமுகம் செய்யப்படும். அதேபோல கிளாசிக்கல் மோடில், 60 பேர் வரை விளையாட முடியும். முன்னர் இந்த எண்ணிக்கை 40 ஆக இருந்தது. 

இது குறித்து டென்சென்ட் கேம்ஸ் வெளியிட்ட அறிக்கையில், “வெறும் 400 எம்.பி இடம் இருந்தாலே இந்த பப்ஜி லைட் மொபைல் கேமை இன்ஸ்டால் செய்து கொள்ளலாம். அனைத்து மொபைல் போன்களிலும் இந்த கேம் சீராக செயல்படும். இந்தியாவில் இருக்கும் ஸ்மார்ட் போன்களில் பாதிக்கு மேல் குறைந்த திறனுடையது என்பதை மனதில் வைத்துதான் இந்த புதிய கேம் ரிலீஸ் செய்யப்பட்டுள்ளது. இந்த மொபைல் கேமில் புதியதாக விளையாட உள்ளவர்களுக்கு பல்வேறு பரிசுகள் காத்திருக்கின்றன” என்று தெரிவித்துள்ளது. 

இந்த புதிய பப்ஜி லைட்டின் சிறப்பம்சங்களாக, குறிவைப்பதற்கு ஏதுவாக டிசைன், புதிய வின்னர் பாஸ், புல்லட் டிரெய்ல் அட்ஜெஸ்மென்ட், வெகு நேரம் நீட்டிக்கப்பட்ட தாக்கும் நேரம், நகரும் போதே குணப்படுத்திக் கொள்ளுதல், மேப் ஆப்டிமைசேஷன், லொகேஷன் டிஸ்ப்ளே ஆகியவை இருக்கின்றன. 

டென்சென்ட், பப்ஜி லைட் கேமை இன்ஸ்டால் செய்ய 400 எம்.பி இருந்தால் போதும் என்று சொன்னாலும், அதன் மொத்த சைஸ் 491 எம்.பி ஆகும். 

(இந்தக் கட்டுரை பல்வேறு தரவுகளிலிருந்து தொகுக்கப்பட்டது.)

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here