மத்திய இடைநிலைக் கல்வி வாரிய (சிபிஎஸ்இ)10 மற்றும் 12ஆம் வகுப்புகளுக்கான ஆண்டு இறுதி தேர்வு தேதிகளை இணையதளத்தில் வெளியிட்டிருக்கிறது.

12ஆம் வகுப்பு தேர்வுகள் பிப்ரவரி 15ஆம்தேதி தொடங்கி ஏப்ரல் 3ஆம்தேதி வரை நடைபெறுகின்றன(10-ம் வகுப்பு தேர்வு அட்டவணை).

10ஆம் வகுப்புக்கான தேர்வுகள் பிப்ரவரி 21ஆம் தொடங்கி மார்ச் மாதம் 29ஆம் தேதி வரை நடைபெறுகின்றன(12-ம் வகுப்பு தேர்வு அட்டவணை).

இந்த நாட்களுக்கு இடையே போட்டித் தேர்வுகள் ஏதும் நடைபெறவில்லை என்பதை சி.பி.எஸ்.இ. உறுதி செய்திருக்கிறது. கடந்த ஆண்டு ஜே.இ.இ. மெய்ன் தேர்வுகள் நடைபெற்றதால், 12ஆம் வகுப்பு இயற்பியல் பாடம் மற்றும் மாற்றி அமைக்கப்பட்டுள்ளது.

அனைத்துத் தேர்வுகளும் காலை 10.30 மணிக்கு தொடங்கி மதியம் 1.30 மணிக்கு முடிவடையும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

12ஆம் வகுப்புக்கு 40 வெகேஷனல் பாடங்களை சி.பி.எஸ்.இ. அளிக்கிறது. 10ஆம் வகுப்பை பொறுத்தவரை 15 வெகேஷனல் வகுப்புகள் இந்த பாடத்திட்டத்தில் உள்ளன. இதற்கான தேர்வுகள் சமீபத்தில் முடிவடைந்துள்ளன. இதில் பெறப்படும் மதிப்பெண்களின் அடிப்படையில் டெல்லி பல்கலைக் கழகத்தில் அட்மிஷன் வழங்கப்படும் என்பதால், டெல்லி உயர் நீதிமன்ற உத்தரவுப்படி தேர்வுகள் நடந்திருக்கின்றன.

சி.பி.எஸ்.இ. தேர்வு முடிவுகளின் அடிப்படையில் டெல்லி பல்கலைக் கழகத்தில் அட்மிஷன்கள் வழங்கப்படுகின்றன. டெல்லி பல்கலைக் கழக அட்மிஷன்களுக்கு ஏற்ற வகையில் சி.பி.எஸ்.இ. தேர்வு தேர்வு அட்டவணை தயாரிக்கப்பட்டுள்ளது. தேர்வு முடிவுகள் ஜூன் முதல் வாரத்தில் வெளியிடப்படும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here