கேலக்ஸி நோட் 9 (Galaxy Note 9) எக்சைனோஸ் ( Exynos )சிப்செட் கொண்ட வேரியன்ட் விவரங்கள் வெளியாகியுள்ளது.

இந்த ஆண்டு ஜூலை மாதத்தில் வெளியாக இருக்கும் கேலக்ஸி நோட் 9( Galaxy Note 9 ) ஸ்மார்ட்போனில் சாம்சங் நிறுவனம் முன்னதாக வெளியிட்ட கேலக்ஸி எஸ்9 மற்றும் கேலக்ஸி எஸ்9 பிளஸ் ஸ்மார்ட்போன்களில் வழங்கப்பட்ட எக்சைனோஸ் 9810 சிப்செட்( Exynos 9810 Octa )கொண்டிருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

6.4 இன்ச் (6.4 inches) Super AMOLED தொடு திரை, ஆக்டாகோர் சிப்செட் 1.79 ஜிகாஹெர்ட்ஸ் Octa-core (4×2.7 GHz Mongoose M3 & 4×1.8 GHz Cortex-A55) கொண்டிருப்பதோடு, ஆன்ட்ராய்டு 8.1 ஓரியோ (Android 8.1 (Oreo) ) இயங்குதளம் மற்றும் 6 ஜிபி ரேம் (6 GB RAM ) கொண்டிருக்கும் என சீன வலைத்தளத்தில் வெளியாகியிருக்கும் தகவல்களில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முந்தைய ஆண்டுகளை விட இந்த ஆண்டு சாம்சங் கேலக்ஸி நோட் ஸ்மார்ட்போன்கள் ஜூலை மாதம் அறிமுகம் செய்யப்படலாம் என்றும் அறிமுக நிகழ்வு ஜூலை 29-ம் தேதி நடைபெறும் என கூறப்படுகிறது.

சாம்சங் கேலக்ஸி நோட் 9 ஸ்மார்ட்போனில் கைரேகை சென்சார் வழக்கமான கேலக்ஸி மாடல்களை போன்றே பின்புறம் வழங்கப்படும் என கூறப்படுகிறது. முன்னதாக வெளியான தகவல்களில் கேலக்ஸி நோட் 9 ஸ்மார்ட்போனில் இன்-டிஸ்ப்ளே கைரேகை சென்சார் தொழில்நுட்பம் வழங்கப்படலாம் என கூறப்பட்டிருந்தது.

கருத்துகள் இல்லை

ஒரு பதிலை விடவும்