வெளியானது அமேசான் அலெக்ஸா ஆட்டோ

The Echo Auto can connect to your car stereo over Bluetooth or an auxiliary cable to play music, lets you ask Alexa for directions (which will pop up on your phone's screen), and can control smart-home accessories so your house is ready when you get there.

0
225

அமேசான் நிறுவனம் இந்தியாவில் ‘எக்கோ ஆட்டோ’ சாதனத்தை அண்மையில் அறிமுகம் செய்துள்ளது.

இதையடுத்து, அமேசானின் குரல் வழி சேவை மென்பொருளான, அலெக்ஸா, இப்போது காரில் நமக்கு துணையாக வர இருக்கிறது. இந்த சாதனத்தை, காரின் ஏசி வென்டில் எளிதாகப் பொருத்திக் கொள்ளலாம்.

மேலும், காரின், 12 வோல்ட் சார்ஜிங் சாக்கெட் அல்லது யு.எஸ்.பி.,போர்ட்டில் இணைத்துக் கொள்ளலாம். காரின் ஸ்டீரியோ சிஸ்டத்துடன், இந்த எக்கோ ஆட்டோவை, புளுடூத் மூலமாகவோ அல்லது, 3.5மி.மீ., ஆக்ஸிலரி கேபிள் மூலமாகவோ இணைப்பை ஏற்படுத்திக் கொள்ளலாம்.

இந்த சாதனத்தின் மூலமாக, போன் அழைப்புகளை மேற்கொள்ளவோ அல்லது ஏற்கவோ செய்யலாம். இசை கேட்கலாம், செய்திகளை கேட்கலாம்… அனைத்தையும் குரல்வழி உத்தரவு மூலம் செயல்படுத்தலாம்.

என்னதான், வாகனங்களில் ஆண்ட்ராய்டு மற்றும் ஆப்பிள் ஆட்டோ ப்ளே இருந்தாலும் வாய்ஸ் கன்ட்ரோல் மூலம் இயக்கும் வசதி இன்னும் இந்தியாவில் பெரும்பான்மையாக அப்டேட் ஆகவில்லை. இந்தக் குறையைப் போக்கும் வகையில் அமேசான் எக்கோ ஆட்டோ இருக்கும். இந்தியாவில் இதன் விலை 4,999 ரூபாய்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here