வெளியானது சாம்சங் கேலக்ஸி A70 [Samsung Galaxy A70]

0
779


4,500 எம்ஏஎச் பேட்டரி கொண்டுள்ள இந்த போனில் 25W சூப்பர் சார்ஜிங் உள்ளது. 

சீனாவில், சாம்சங் A70 மாடல் ப்ரீ-ஆர்டரை ஆரம்பித்துள்ளது. அதற்கான விலையாக சுமார் 31,000 ரூபாய் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. சாம்சங் இந்தியா தளத்திலும், A70 குறித்த சிறப்பம்சங்கள் பட்டியலிடப்பட்டுள்ளன. இதன் அர்த்தம், இந்தியாவில் A70 சீக்கிரமே ரிலீஸ் ஆகலாம் என்பதுதான். இந்த வாரத்தின் தொடக்கத்தில் சாம்சங் நிறுவனம், A80 ஸ்மார்ட்போனை ரிலீஸ் செய்தது. அப்போதே, ஏப்ரல் 26 ஆம் தேதி முதல் A70 இந்திய சந்தைகளில் விற்பனைக்கு வரும் என்று தெரிவித்தது. 

சாம்சங்கேலக்ஸி A70 விலை:

சீனாவில் ப்ரீ-ஆர்டர் முறையில் சாம்சங் A70 விற்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. கேலக்ஸி A70-யின் 6ஜிபி ரேம் மாடல், சுமார் 31,000 ரூபாய்க்கு விற்கப்படும் என்றும், 8ஜிபி மாடல் சுமார் 34,000 ரூபாய்க்கு விற்கப்படும் என்றும் தகவல் தெரிவிக்கப்படுகிறது. 
 

சாம்சங் இந்தியா தளத்தில் A70-க்கு என்று தனியாக ஒரு மைக்ரோசைட் உருவாக்கப்பட்டுள்ளது. அந்த மைக்ரோசைட்டில் போனின் விலை குறித்து தெரிவிக்கப்படவில்லை. அதே நேரத்தில் போனின் அனைத்து சிறப்பம்சங்கள் குறித்தும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. A70-யின் மூன்று பின்புற கேமரா, 25W ஃபாஸ்ட் சார்ஜிங், ஆன்- ஸ்க்ரீன் ஃபிங்கர் பிரின்ட் சென்சார் உள்ளிட்டவைகள் குறித்து மைக்ரோசைட்டில் தெளிவாக விளக்கப்பட்டிருக்கிறது. 

இந்த மைக்ரோசைட் ஆரம்பிக்கப்பட்டுள்ளதால், இந்தியாவில் A70 சீக்கிரமே ரிலீஸ் செய்யப்படும் என்பதை யூகிக்க முடிகிறது. 

4 வித வண்ணங்களில் A70 விற்பனைக்கு வரும்

சாம்சங்கேலக்ஸி A70 சிறப்பம்சங்கள்:

ஆண்ட்ராய்டு பை ஒன் யூ.ஐ-யில் இயங்கும், டூயல் சிம் ஸ்லாட் கொண்ட சாம்சங் கேலக்ஸி A70-யில் முழு ஹெச்.டி 6.7 இன்ச் ஸ்க்ரீன், சூப்பர் ஆமோலெட் இன்ஃபினிட்டி-யூ டிஸ்ப்ளே பேனல் இருக்கிறது. 20:9 ஆஸ்பக்ட் ரேஷியோவில் இது இயங்குகிறது. அக்டா-கோர் குவால்கம் ஸ்னப்டிராகன் 675 எஸ்ஓசி-யால் பவரூட்டப்பட்டுள்ள சாம்சங் கேலக்ஸி A70, 6 ஜிபி மற்றும் 8 ஜிபி வகைகளில் கிடைக்கும். 128 ஜிபி சேமிப்பு வசதியுடன் வரும் இந்த போனில், 512 ஜிபி வரை சேமிப்பு வசதியைக் கூட்டிக் கொள்ளும் அமைப்பு பொருத்தப்பட்டுள்ளது. 

போனின் பின்புறத்தில் மூன்று கேமராக்கள் கொடுக்கப்பட்டுள்ளன. 32, 8 மற்றும் 5 மெகா பிக்சல் திறன் கொண்ட கேமராக்கள் பின்புறத்தில் இருக்கின்றன. அதேபோல முன்புறத்திலும் 32 மெகா பிக்சல் கொண்ட செல்ஃபி கேமரா இருக்கிறது. 

ஆன்-ஸ்க்ரீன் ஃபிங்கர் பிரின்ட் கொண்டுள்ள A70, ஃபேஷியல் ரெகக்னிஷனையும பெற்றுள்ளது. 4,500 எம்ஏஎச் பேட்டரி கொண்டுள்ள இந்த போனில் 25W சூப்பர் சார்ஜிங் உள்ளது. 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here