வெளியாகிறது ஹெச்.டி. ஆடியோ வசதி கொண்ட புதிய ஜியோமி இயர்போன்

Xiaomi has teased that its new headphones will deliver “electrifying sound experience.”

0
252

ஜியோமி இந்தியா நிறுவனம் பிப்ரவரி 25 ஆம் தேதி இந்தியாவில் புதிய ஆடியோ சாதனத்தை அறிமுகம் செய்ய இருக்கிறது. இந்த புதிய ஜியோமி சாதனம் வையர்டு இயர்போனாக இருக்கும் என எதிர்பார்க்கலாம். 

mi-earphones-xiaomi-image-1582271946225

அந்த வரிசையில் ஜியோமி புதிய சாதனத்திற்கான டீசரை தனது அதிகாரப்பூர்வ சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ளது.  ஹடி ஆடியோ(#HDAudio) பிப்ரவரி 25 இல் அறிமுகம் எனும் தகவல்
டீசருடன் இடம்பெற்று இருக்கிறது. டீசர் வீடியோவில் புதிய இயர்போன் பிரெயிட் செய்யப்பட்ட கேபிள் கொண்டிருக்கும் என தெரியவந்துள்ளது.

மேலும் இந்த இயர்போன் டூயல் டிரைவர்கள் மற்றும் ஹெச்.டி. ஆடியோ வசதி கொண்டிருக்கும் என தெரிய வருகிறது. ஜியோமியின் புதிய இயர்போன் தற்சமயம் ஜியோமி விற்பனை செய்து வரும் Mi இயர்போன்களுக்கு மாற்றாக இருக்கும் என கூறப்படுகிறது. 

புதிய இயர்போன் ரியல்மி பட்ஸ் 2 சாதனத்திற்கு போட்டியாக அமையும் என எதிர்பார்க்கலாம். இதில் 11.2 எம்.எம். பூஸ்ட் டிரைவர், டூயல் டேங்கில் ஃபிரீ கேபிள் மற்றும் பல்வேறு அம்சங்கள் வழங்கப்பட்டுள்ளன.

முன்னதாக சியோமி Mi அவுட்டோர் ஸ்பீக்கர் மற்றும் Mi டூத்பிரஷ் உள்ளிட்ட சாசதனங்களை அந்நிறுவனம் இந்தியாவில் அறிமுகம் செய்தது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here