அசுஸ் நிறுவனம் தனது புதிய அசுஸ் ஜென்போன் 6 என்ற ஸ்மார்ட்போனை வெளியிட்டுள்ளது.  

இந்த ஸ்மார்ட்போன் ஸ்னாப்டிராகன் 855 ப்ராசஸர், மூன்று சிம் ஸ்லாட்கள், ஸ்மார்ட் கீ போன்ற வசதிகளுடன்வெளிவருகிறது. மேலும் இந்த ஸ்மார்ட்போன் 48 மெகா பிக்சல் கேமரா,5000mAh பேட்டரி இடம்பெறலாம் என்ற தகவல்களும்கசிந்திருக்கிறது.

ஆசுஸ் ஜென்போன் 6, குவால்காம் ஸ்னேப்ட்ராகன் 855, 48 மெகாபிக்சல் மற்றும் 13 மெகாபிக்சல் என இரண்டு அளவிலான கேமராக்கள் கொண்டிருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த மொபைல்போனில் மூன்று ஸ்லாட்கள் இருப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது ஆசுஸ் நிறுவனம், அதில் இரண்டு சிம்களுக்காகவும் ஒன்று மெமரி கார்டுக்காகவும் இருக்கலாம். மேலும், இதில் ஒரு ஸ்மார்ட் கீ பொருத்தப்பட்டுள்ளதாகவும் தெரியவருகிறது. 

மேலும், இந்த ஸ்மார்ட்போன் 6.3″ இன்ச் FHD+ திரை (1080×2340 பிக்சல்கள்) மற்றும் 19.5:9 என்ற திரைவிகிதத்திலான திரையை கொண்டிருக்கும் என தகவல்கள் வெளியாகியிருக்கின்றன. மேலும், இந்த ஸ்மார்ட்போனில் பின்புறம் ஃபிங்கர் பிரின்ட் மற்றும், முன்புற கேமரா, நாட்ச் அல்லது பன்ச்-ஹோல் டிஸ்ப்லே கொடுக்கப்படலாமெனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

கிடைத்த தகவல்களின்படி இந்த ஸ்மார்ட்போனின் விலைவிபரம் :  மேலும் 6GBRAM + 128GB மெமரியுடன் கூடிய ஆசுஸ் ஜென்போன் 619,990 தாய்வான் டலர்கள்(ரூ.45,100) ஆகும்.    8GB RAM + 256GB மெமரியுடன்கூடிய ஆசுஸ் ஜென்போன் 6 23,990 தாய்வான் டலர்கள்(ரூ.54,100) ஆகும். 12GB RAM + 512GB மெமரியுடன் கூடிய ஆசுஸ் ஜென்போன் 629,990 தாய்வான் டலர்கள்(ரூ.67,700) என்ற விலைகளில் கிடைக்கும் என கூறப்படுகிறது. 

இந்த ஸ்மார்ட்போன்களின் இந்திய சந்தை விலை குறித்த எந்த தகவல்களும் வெளியாகவில்லை.

இந்த ஸ்மார்ட்போன் இன்று (மே 16) ஸ்பெயினில் அறிமுகப்படுத்தப்படவுள்ளது.

ஆசுஸ் ஜென்போன் 6  ஸ்மார்ட்போன் அறிமுக நிகழ்ச்சி ஸ்பெயின் நாட்டிலுள்ள வேலன்சியா நகரில் நடக்கவுள்ளது. இந்த நிகழ்ச்சி அந்த நாட்டின் நேரப்படி இரவு 8 மணிக்கு துவங்கவுள்ளது. இது இந்திய நேரப்படி இரவு11:30 மணியாகும். ஸ்பெயினில் நடக்கவுள்ள இந்த அறிமுக நிகழ்வினை தனது யூடூப் பக்கத்தில் நேரலையாக வெளியிட திட்டமிட்டுள்ளது ஆசுஸ் நிறுவனம். அதுமட்டுமின்றி இந்த நிகழ்ச்சியினை நேரலையில் ஓளிபரப்ப பிரத்யேகமாக ஒரு தளத்தையும் மேம்படுத்தியுள்ளது ஆசுஸ் நிறுவனம். இதன் மூலம், நாம் இன்று இரவு11:30 மணிக்கு ஆசுஸ் ஜென்போன் 6 ஸ்மார்ட்போன் அறிமுக நிகழ்வை நேரலையில் காணலாம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here