ஜனவரி 10 ஆம் தேதி பேட்ட, விஸ்வாசம் படங்கள் வெளியாகி, திரையிட்ட இடங்களில் எல்லாம் வசூல் மழை பொழிந்து வருகின்றன. தமிழக பெரு நகரங்களில் பேட்ட முதலிடத்திலும், நகரங்கள் மற்றும் கிராமங்களில் விஸ்வாசம் முதலிடத்திலும் உள்ளன. தமிழக அளவில் முதல்நாளிலிருந்து விஸ்வாசம் முதலிடத்தை தக்க வைத்துக் கொள்ள, பேட்ட இரண்டாவது இடத்தில் உள்ளது.

தமிழகத்துக்கு வெளியே நிலைமை தலைகீழ். பேட்ட முதலிடம், விஸ்வாசம் இரண்டாமிடம். கேரளா, ஆந்திரா, தெலுங்கானா, கர்நாடகா மற்றும் இந்தியாவின் பிறப்பகுதிகளில் இதுவே நிலைமை. அதேபோல் வெளிநாடுகளில் பேட்ட அசைக்க முடியாத வசூலுடன் முதலிடத்தில் உள்ளது. மிகவும் பின்தங்கி இரண்டாமிடத்தில் விஸ்வாசம். இதனால், தமிழக அளவில் முதலிடத்தைப் பிடித்தாலும், உலக அளவில் பேட்டயே முதலிடத்தில் உள்ளது.

யுஎஸ்ஏ
——-

யுஎஸ்ஸில் பேட்ட முதல் நான்கு தினங்களில் சுமார் 13 கோடிகளை கடந்து வசூலித்துள்ளது. இது உத்தேச வசூல். படம் 2 மில்லியின் யுஎஸ் டாலர்களை வார இறுதியில் கடந்திருப்பதாக கூறப்படுகிறது.

யுஎஸ்ஸில் விஸ்வாசம் முதல் நான்கு தினங்களில் 1.33 கோடியை வசூலித்துள்ளது.

யுகே மற்றும் அயர்லாந்த்
————————-

யுகே மற்றும் அயர்லாந்தில் பேட்ட முதல் நான்கு தினங்களில் 2.63 கோடிகளை வசூலித்துள்ளது.

அதே யுகே மற்றும் அயர்லாந்தில் விஸ்வாசத்தின் நான்கு நாள் வசூல் 86.88 லட்சங்கள்.

ஆஸ்ட்ரேலியா
—————-

ஆஸ்ட்ரேலியாவில் பேட்ட முதல் நான்கு தினங்களில் 2.12 கோடிகளை வசூலித்துள்ளது.

இங்கு விஸ்வாசத்தின் நான்கு நாள் வசூல், 46.42 லட்சங்கள்.

நியூசிலாந்த்
————

நியூசிலாந்தில் பேட்ட முதல் நான்கு தினங்களில் 21.19 லட்சங்களை வசூலித்துள்ளது.

விஸ்வாசத்தின் நான்கு நாள் வசூல் 4.60 லட்சங்கள்.

மலேசியா
———-

மலேசியாவில் பேட்ட வெளியான முதல் நான்கு தினங்களில் 2.17 கோடிகளை தனதாக்கியுள்ளது.

விஸ்வாசம் நான்கு தினங்களில் மலேசியாவில் வசூலித்தது 1.61 கோடி.

சிங்கப்பூர்
———-

சிங்கப்பூரில் பேட்ட முதல் நான்கு தினங்களில் 52.16 லட்சங்களை வசூலித்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here