வெளிநாடுகளில் காலா படத்தின் ஓபனிங் மோசம் என்று சொல்வதற்கில்லை. அதேநேரம் ஆஹா என்று புகழ்வதற்கும் இல்லை.

யுஎஸ்ஸில் புதிய தெலுங்குப் படங்கள் முதல் மூன்று தினங்களில் 15 கோடிகளைத்தாண்டி வசூலிக்கின்றன. ரங்கஸ்தலம் 14 கோடிகளையும், பரத் அனே நேனு 16 கோடிகளும் வசூலித்தன. மெர்சல் 5 தினங்களில் 7 கோடிகளை கடந்து வசூலித்தது. காலா முதல் நான்கு தினங்களில் யுஎஸ்ஸில் 12.36 கோடிகளை வசூலித்துள்ளது. இது நல்ல வசூல்.

கனடாவில் காலா அதிகம் வெளியாகவில்லை. தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவத்தில் போலீஸ்காரர்களை ரஜினி நியாயப்படுத்தி பேசிய பேச்சைத் தொடர்ந்து கனடா விநியோகஸ்தர்கள் படத்தை வாங்க ஆர்வம் காட்டவில்லை என கூறப்படுகிறது. காலா முதல் நான்கு தினங்களில் இங்கு 1.58 லட்சத்தை மட்டுமே வசூலித்துள்ளது.

யுகே மற்றும் அயர்லாந்தில் காலா முதல் நான்கு தினங்களில் 1.42 கோடியை வசூலித்துள்ளது. இது சுமாரான வசூல். ஆஸ்ட்ரேலியாவில் காலா நல்ல ஓபனிங்கை பெற்றுள்ளது. முதல்நான்கு தினங்களில் 2.07 கோடிகளை இப்படம் வசூலித்துள்ளது. மெர்சல் இங்கு முதல் ஐந்து தினங்களில் 2.08 கோடிகளை வசூலித்தது குறிப்பிடத்தக்கது.

நியூஸிலாந்தில் 17.89 லட்சங்களும், மலேசியாவில் 1.78 கோடியும், ஜெர்மனியில் 2.14 லட்சங்களும், சிங்கப்பூரில் 32.1 லட்சங்களும் காலா ஓபனிங் வசூலாக பெற்றுள்ளது.

இந்த வசூலை குறைந்தபட்சம் மூன்று நான்கு வார நாள்களில் தக்க வைத்திருந்தால் மட்டுமே காலா வெளிநாட்டு வசூலை நல்ல வசூல் என சொல்ல முடியும்.

கருத்துகள் இல்லை

ஒரு பதிலை விடவும்