ஒருகாலத்தில் ரஜினி, கமல், ஷங்கர், மணிரத்னம் படங்கள் மட்டுமே வெளிநாடுகளில் வசூலை குவிக்கும். அதிலும் மணிரத்னம் படம் என்றால் வசூலுக்கு பஞ்சமிருக்காது. ஆனால், சமீபமாக மணிரத்னம் படங்களின் வெளிநாட்டு வசூல் டல்லடித்தது. செக்கச் சிவந்த வானத்தில் மீண்டும் தனது ஃபார்முக்கு மணிரத்னம் திரும்பியுள்ளார்.

யுஎஸ்ஸில் செக்கச் சிவந்த வானம் முதல்வார இறுதியில் சுமார் 5.28 கோடிகளை வசூலித்துள்ளது. முன்னணி நடிகர்களின் படங்கள் மட்டுமே ஓபனிங் வீக் எண்டில் 5 கோடிகளை யுஎஸ்ஸில் தாண்டும்.

யுகே மற்றும் அயர்லாந்தில் சுமார் 82.24 லட்சங்களை படம் வசூலித்துள்ளது. நார்வேயில் சுமார் 10.75 லட்சங்கள். யுஏஇ எனப்படும் யுனெடெட் அரபு எமிரேட்ஸில் சுமார் 5.50 கோடிகளை படம் வசூலித்துள்ளது.

மலேசியாவில் சுமார் 1.05 கோடியும், ஆஸ்ட்ரேலியாவில் 1.34 கோடியும், நியூசிலாந்தில் 13.33 லட்சங்களையும் செக்கச் சிவந்த வானம் வசூலித்துள்ளது. ஆஸ்ட்ரேலியாவில் முதல்வார இறுதியில் ஒரு கோடியை தாண்டியிருப்பது சாதனை.

மணிரத்னத்தின் படம் இந்த வாரமும் வசூலை தக்க வைக்கும் என்கிறார்.

கருத்துகள் இல்லை

ஒரு பதிலை விடவும்