வெல்லும் மனித நேயம்: ஜாதி, மத பேதமின்றி நிவாரண உதவிகள்

0
1337

சென்னையை புரட்டிப் போட்ட மழை வெள்ளம், மக்கள் மனங்களையும் புரட்டிப் போட்டுள்ளது. எந்த ஜாதி, என்ன மதம், ஏழை, பணக்காரன் என்ற எந்த வித்தியாசமும் இன்றி, மனித நேயத்தை மட்டுமே மனத்தில் இறுத்தி பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவிகளை செய்து வருகின்றனர் பல்வேறு அமைப்பினர்.

உடைமைகளை இழந்து குந்தவும் குடிசை இல்லாமல் தவிக்கும் லட்சக்கணக்கான மக்களுக்கு அரசி, பால், பருப்பு, காய்கறிகள், தண்ணீர், துணி, பழங்கள், பாய்கள், போர்வைகள், நிலவேம்பு காஷயம், மருந்து வகைகள் உள்ளிட்டவை பாதிக்கப்பட்ட மக்களுக்கு வழங்கப்பட்டு வருகின்றன.

டிஎன்டிஜெ

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் சார்பில் சுமார் 2000 பேர் களத்தில் குதித்து வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட மக்களை மீட்டதோடு உணவு, குடிநீர் வழங்கினர். சைதாப்பேட்டை, வேளச்சேரி, சூளைப்பள்ளம் உள்ளிட்ட பகுதிகளுக்கு சென்று மீட்புப் பணிகளையும், நிவாரணப் பணிகளையும் மேற்கொண்டு வருகின்றனர்.

எஸ்டிபிஐ

அதேபோன்று எஸ்.டி.பி.ஐ. சார்பிலும் காஞ்சிபுரம், கடலூர், திருவள்ளூர், சென்னை ஆகிய மாவட்டங்களில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவிகள் செய்யப்பட்டுள்ளன. சென்னையில் வேளச்சேரி, சைதாப்பேட்டை, புளியந்தோப்பு, வில்லிவாக்கம், ஓட்டேரி உள்ளிட்ட 5 இடங்களில் மருத்துவ முகாம்கள் நடத்தப்பட்டு, சுமார் 5000 பேருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. இதேப்போன்று கடலூரிலும் 1200 பேருக்கு உணவும், ரூ.2 லட்சம் மதிப்பிலான நிவாரணப் பொருட்களும் வழங்கப்பட்டன.

kksm dehlan baqavi

இடதுசாரி அமைப்புகள்

சி.பி.எம்.எல் மக்கள் விடுதலை மற்றும் இளந்தமிழகம் இயக்கமும் இணைந்து பேரிடர் மீட்பு பணிகளை செய்தன. திராவிடர் கழகம், திராவிடர் விடுதலைக்கழகம் உள்ளிட்ட அமைப்புகளும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உணவுகளை வழங்கி நிவாரண உதவிகளை செய்து வருகின்றன.

தொண்டு நிறுவனங்கள்

இவைகள் ஒரு புறமிருக்க தமிழ்நாட்டின் மற்ற மாவட்டங்களில் இருந்து பல்வேறு அமைப்பினர், தன்னார்வ தொண்டு நிறுவனங்களை சேர்ந்தவர்கள் என அனைவரும் முன்வந்து நிவாரண பணிகளை மேற்கொண்டனர். தனி நபர்களும் தங்கள் வீடுகளில் உணவு தயாரித்து பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு கொண்டு வந்து வழங்கிச் சென்றதையும் பார்க்க முடிந்தது.

நிவாரணப் பணிகளில் கொங்குநாடு மக்கள் தேசியக் கட்சியினர்
நிவாரணப் பணிகளில் கொங்குநாடு மக்கள் தேசியக் கட்சியினர்

கோவையில் இருந்து கொங்குநாடு மக்கள் தேசியக் கட்சி, மதுரையில் இருந்து “வா நண்பா கை கொடுப்போம்” என்ற அமைப்பு என பல்வேறு அமைப்புகள் ஜாதி, மதம், கட்சி பேதம் பாராமல் தங்களின் மனித நேயத்தை வெளிப்படுத்துவதன் மூலம் உருகுலைந்த சென்னைக்கு உயிருட்டும் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்திய யூனியன் முஸ்லிம் லீக் சார்பில் நிவாரணப் பணிகள்
இந்திய யூனியன் முஸ்லிம் லீக் சார்பில் நிவாரணப் பணிகள்

காஞ்சிபுரம் மேற்கு மாவட்டத்தில் கனமழையால் பாதிக்கப்பட்ட மக்களை தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் வெள்ள மீட்புக் குழுவினர் நேரில் சந்தித்து நிவாரணப் பொருட்களை வழங்கினர். அதே போன்று ஊரப்பாக்கம், அம்பத்தூர் பெரியார் நகர் ஆகிய பகுதிகளில் பாய்களும், பல்லாவரம் திருநீர்மலை ஆகிய பகுதிகளில் ஆடைகளும் வழங்கப்பட்டன. சேலையூர், குரோம்பேட்டை, தாம்பரம், எருமையூர், பம்மல் அனைப்புத்தூர், ஆவடி, எண்ணூர், ஆழ்வார் திருநகர், போரூர், பாடி, செம்மஞ்சேரி உள்ளிட்ட பகுதிகளிலும் நிவாரணப் பணிகளை தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சார்பில் நடைபெற்றது.

மே 17 இயக்கம்

கடலூர் பண்ருட்டி பகுதிகளில் உள்ள ஆ.நத்தம், அருண்குணம், மேலிருப்பு, செம்மேடு ஆகிய பகுதிகளில் உள்ள கிராம மக்களுக்கு பிஸ்கட் பாக்ஸ், போர்வை, துண்டு, துணிகள், குடிநீர், லுங்கி, நாப்கின், நைட்டி, தீப்பெட்டி, புடவைகள், கொசு பத்தி, பால்பவுடர், குளுக்கோஸ் ஆகிய பொருட்களை மே 17 இயக்கத்தினர் வழங்கினர்.

கருத்துகள் இல்லை

ஒரு பதிலை விடவும்