வெற்றிலையில் 84.4% நீர்ச்சத்தும், 3.1% புரதச் சத்தும், 0.8% கொழுப்புச் சத்தும் நிறைந்துள்ளது. இதில் கால்சியம், கரோட்டின், தயமின், ரிபோபிளேவின் மற்றும் வைட்டமின் சி உள்ளது.

வயிற்றுக் கோளாறு, மலட்டுத்தன்மை நீங்க, ஜீரண சக்தி அதிகரிக்க வெற்றிலை பெரும் உதவி செய்கின்றது.

மலட்டுத்தன்மைக்கு

மலட்டுத்தன்மை குறைபாடு நீங்க வெற்றிலை வேர், மிளகு இவை இரண்டையும் சம அளவு எடுத்து அரைத்து காலை மாலை என இருவேளையும் (48 நாட்கள்) சாப்பிட்டு வந்தால் மலட்டுத்தன்மை நீங்கும்.

காதில் சீழ் வடிந்தால்

காதில் சீழ் வடிவது நிற்க வெற்றிலைச் சாற்றில் தேங்காய் எண்ணெய் சேர்த்துக் காய்ச்சி வைத்துக் கொண்டு காலை, மாலை என இருவேளையும் காதில் சில துளி விட்டு வந்தால் காதில் சீழ் வடிதல் நிற்கும்.

மலச்சிக்கல்

மலச்சிக்கல் குணமாக வெற்றிலைக் கொடியின் வேரை சிறிதளவு எடுத்து அதனுடன் மிளகு(3) சேர்த்து தினமும் இரவு வேளை சாப்பிட்ட பின்பு சாப்பிட்டு வந்தால் மலச்சிக்கல் குணமாகும்.

வயிற்று வலி குணமாக

வயிற்று வலி குணமாக வெற்றிலையுடன், கல் உப்பு சேர்த்து மென்று தின்று வந்தால் வயிற்றுவலி குணமாகும்.

வயிற்றுப்போக்கு நிற்க வெற்றிலையோடு ஒமம் சேர்த்து அரைத்து அதனுடன் தேன்(1ஸ்பூன்) அளவு கலந்து சாப்பிட்டால் வயிற்றுப்போக்கு நிற்கும்.

தலைவலிக்கு

தலைவலி குணமாக இளம் வெற்றிலையின் நுனிப் பகுதியை எடுத்து அரைத்து நெற்றியில் பற்றுப்போட்டுவந்தால் தலைவலி குணமாகும்.

நெஞ்சுவலித்தால்

நெஞ்சுவலி உடனே நிற்க வெற்றிலை(2) எடுத்து அதனுடன் சிறிதளவு கஸ்தூரி மஞ்சளை வைத்து மென்று தின்று வந்தால் நெஞ்சுவலி உடனே நின்றுவிடும்.

(இந்தக் கட்டுரை பல்வேறு தரவுகளிலிருந்து தொகுக்கப்பட்டது.)

கருத்துகள் இல்லை

ஒரு பதிலை விடவும்