வெற்றிமாறன் படத்தின் நாயகியான தொகுப்பாளினி ரம்யா

0
490
VJ Ramya

சில தொலைக்காட்சி தொகுப்பாளினிகள் சினிமா நட்சத்திரங்கள் அளவுக்கு தமிழகத்தில் பிரபலம். அதில் ஒருவர் ரம்யா. மணிரத்னமே கூப்டாலும் சினிமாவுக்கு வரமாட்டேன் என்று சொல்லும் இவர்கள் கடைசியில் மணிரத்னம் படம் மூலமாகவே சினிமாவுக்கு வருவார்கள். ரம்யா மணிரத்னத்தின் ஓ காதல் கண்மணி படத்தில் நடித்தார். அதுதான் முதல் சினிமா அறிமுகம். ஆனால், நாயகி கிடையாது. அவருக்கு முதல் நாயகி வாய்ப்பை வழங்கியிருக்கிறார் வெற்றிமாறன்.

என்ஹெச் 4, புகழ் படங்களை இயக்கிய வெற்றிமாறனின் அசிஸ்டெண்ட் மணிமாறன் சங்கத்தலைவன் என்ற படத்தை இயக்குகிறார். வெற்றிமாறன் தயாரிப்பு. சமுத்திரகனி நாயகனாகும் இந்தப் படத்தில் ரம்யாவை நாயகியாக ஒப்பந்தம் செய்துள்ளனர்.

நல்ல வேடங்கள் அமைந்தால் ரம்யா தொடர்ந்து நடிப்பார் என்பதை சொல்லத் தேவையில்லை.

இதையும் படியுங்கள்: ’ஜிஎஸ்டி எனக்கு புரியவில்லை’: பாஜக அமைச்சரின் பேச்சால் சர்ச்சை

கருத்துகள் இல்லை

ஒரு பதிலை விடவும்