வெற்றிமாறன் இயக்கத்தில் நாயகனாகும் சூரி

பூமணியின் வெக்கை நாவலை அசுரன் என்ற பெயரில் எடுத்து வருகிறார் வெற்றிமாறன். தனுஷ், மஞ்சு வாரியர், பாலாஜி சக்திவேல் உள்ளிட்டவர்கள் படத்தில் நடிக்கின்றனர். தாணுவின் வி கிரியேஷன்ஸ் படத்தை தயாரிக்கிறது. இதையடுத்து வெற்றிமாறன் சூரி நாயகனாக நடிக்கும் படத்தை இயக்குவதாக நம்பத்தகுந்த வட்டாரங்கள் கூறுகின்றன. எல்ரெட் குமார் தனது ஆர்எஸ் இன்போடெயின்மெண்ட் சார்பாக இந்தப் படத்தை தயாரிக்கிறார். படம் குறித்த மேலதிக தகவல்களை விரைவில் எதிர்பார்க்கலாம்.

முரளிதரனாக நடிக்க பெருமைப்படறேன் – விஜய் சேதுபதி

இலங்கை முன்னாள் கிரிக்கெட் வீரர் முத்தையா முரளிதரனின் பயோபிக்கில் முரளிதரனாக நடிக்க விஜய் சேதுபதியுடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டதாக கூறியிருந்தோம். அது இப்போது உறுதியாகியிருக்கிறது. இந்தப் படத்துக்கு, முரளிதரன் எடுத்த விக்கெட்டுகளின் எண்ணிக்கையான 800 ஐ படத்தின் பெயராக வைத்திருக்கிறார்கள். மக்கள் செல்வன் விஜய் சேதுபதி போன்ற ஒருவர் தனது வேடத்தில் நடிப்பது பெருமைக்குரிய விஷயம் என முரளியும், முரளிதரன் போன்ற ஒரு வீரரின் வாழ்க்கை வரலாறில் நடிப்பது தனக்கு பெருமை என விஜய் சேதுபதியும் பரஸ்பரம் கூறியுள்ளார்கள். ஸ்ரீபதி இந்தப் படத்தை இயக்குகிறார். பல மாதங்களாக இந்தப் படக்குழுவுடன் இணைந்து செயல்பட்டு வருவதாக முரளிதரன் தெரிவித்துள்ளார்.

இந்தியன் 2 – உறுதி செய்த ரகுல் ப்ரீத் சிங்

இந்தியன் 2 படத்தில் கமல், காஜல் அகர்வால் நடிப்பது ஏற்கனவே தெரிந்த விஷயம். அவர்களுடன் சித்தார்த், வித்யுத் ஜம்வால் ஆகியோரும் நடிப்பதாக கூறப்பட்டது. பிறகு ரகுல் ப்ரீத் சிங்கும் நடிப்பதாக கூறினர். இதனை ரகுல் உறுதி செய்துள்ளார். ஷங்கர், கமல் காம்பினேஷனில் நடிப்பது என்பது வாழ்க்கையில் எப்போதாவது அமையும் அரிய வாய்ப்பு அதனை தவறவிட மாட்டேன் என்று கூறியுள்ளார். இந்தியன் 2 படத்தில் சித்தார்த்தின் காதலியாக ரகுல் ப்ரீத் சிங் நடிக்கக்கூடும் என்கின்றன தகவல்கள்.

அலியா பட், ரன்பீர் கபூர் திருமணம்?

அலியா பட்டும், ரன்பீர் கபூரும் திருமணம் செய்து கொள்ளப் போகிறார்கள் என்ற போது இவர்கள் இருவரையும்விட ரன்பூர் கபூரின் தந்தை ரிஷி கபூர்தான் அதிகம் கோபப்பட்டார். ஆனால் அலியாவும் ரன்பூரும் தங்களின் காதலை மறுக்கவில்லை. இந்நிலையில், உடல்நிலை சரியில்லாத ரிஷி கபூர் தேறிவரும் நிலையில் அலியா – ரன்பீர் திருமணம் குறித்து மீடியா மீண்டும் பரபரப்பு அடைந்திருக்கிறது. அலியா பட் தனது ஆடை வடிவமைப்பாளரிடம் ஸ்பெஷலாக உடைகள் தைக்க கூறியிருப்பதுதான் இந்த திடீர் பரபரப்புக்கு காரணமாம். 

நேர்கொண்ட பார்வையின் ரன்னிங் டைம்

இந்த வருட ஆரம்பத்தில் விஸ்வாஸம் என்ற பிளாக் பஸ்டர் படத்தை கொடுத்தார் அஜித். ஏழு மாதங்கள் கழிந்த நிலையில் ஆகஸ்ட் 8 ஆம் தேதி அவரது நேர்கொண்ட பார்வை வெளியாகிறது. இந்தப் படத்துக்கு சென்சார் யு/ஏ சான்றிதழ் வழங்கியுள்ளது. படம் இரண்டு மணி 38 நிமிடங்கள் ஓடுகிறது. இது நேர்கொண்ட பார்வையின் ஒரிஜினலான இந்தி பிங்க் படத்தின் ரன்னிங் டைமைவிட அதிகம் என்பது முக்கியமானது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here