தனுஷ் நடிப்பில் வெற்றிமாறன் இயக்கியிருக்கும் வடசென்னை படத்தை 18 வயதுக்கு கீழ் உள்ளவர்கள் பார்க்க தடை விதிக்கப்பட்டிருக்கிறது.

வடசென்னை வெற்றிமாறனின் கனவுப்படம். முப்பது வருடங்களுக்குமேல் நீளும் கதையை கொண்டது. அதனால் படத்தை இரண்டு அல்லது மூன்று பாகங்களாக எடுக்க திட்டமிட்டிருந்தார். முதல்பாகம் வரும் 17 ஆம் தேதி வெளியாகிறது.

வடசென்னையில் அன்பு என்ற பிரதான வேடத்தில் தனுஷ் நடித்துள்ளார். அவருடன் அமீர், சமுத்திரகனி, கிஷோர், ஐஸ்வர்யா ராஜேஷ், ஆண்ட்ரியா என பலர் நடித்துள்ளனர். சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார். தனுஷின் வுண்டர்பாரும், லைகாவும் இணைந்து படத்தை தயாரித்துள்ளன.

வடசென்னையை பின்புலமாகக் கொண்ட தாதா கதை என்பதால் படத்தில் வன்முறைக்காட்சிகள் நிரம்பியுள்ளன. படத்தின் டீஸரிலேயே ரத்தக்களரி அதிகம் இடம்பெற்றிருந்தது. படத்தைப் பார்த்த தணிக்கைக்குழுவினர் வன்முறைக் காட்சிகளுக்கு ஆட்சேபம் தெரிவித்தனர். வெற்றிமாறன் தரப்பு எந்தக் காட்சியையும் நீக்க விரும்பாத காரணத்தால் 18 வயதுக்கு மேல் உள்ளவர்கள் மட்டுமே பார்க்கத் தகுந்த ஏ சான்றிதழை தணிக்கைக்குழு வடசென்னைக்கு அளித்துள்ளது. 18 வயதுக்கு கீழ் உள்ளவர்கள் படம் பார்க்க அனுமதியில்லை என்பதால் குடும்ப பார்வையாளர்கள், மற்றும் பெண்கள் திரையரங்குக்கு வரும் வாய்ப்புகள் குறைவு.

தணிக்கைக்குழுவின் ஏ சான்றிதழை எதிர்த்து மறுதணிக்கைக்கு அனுப்ப நாள்கள் இல்லாததால் ஏ சான்றிதழுடனே படம் திரைக்கு வருகிறது.

கருத்துகள் இல்லை

ஒரு பதிலை விடவும்